Primary tabs


ல்கும்வா யொல்க லுறும்” (திணை.நூற்.17)
என வரும்.
மற்றைய வழியும் - குறியெதிர்ப்பட்டுங்
கையுறை மறுக்கப்பட்டுங்
கொடுக்கப்பெற்றும் இரந்து பின்னின்றான்,
அங்ஙனங் குறியெதிர்ப்
பாடின்றி ஆற்றானாய் இரந்து பின்னிற்றலை மாறுமவ்விடத்தும்:
உ-ம்:
“நின்வாய் செத்து நீபல உள்ளிப்
பெரும்புன் பைதலை வருந்த லன்றியும்
மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம்
தலைநாண் மாமலர் தண்டுறைத் தயங்கக்
கடல்கரை மெலிக்குங் காவிரிப் பேரியாற்
றறல்வார் நெடுங்கயத் தருநிலை கலங்க
மாலிருள் நடுநாட் போகித் தன்னையர்
காலைத் தந்த கணைக்கோட்டு வாளைக்
கவ்வாங் குந்தி அஞ்சொற் பாண்மகள்
நெடுங்கொடி நுடங்கு நறவுமலி மறுகில்
பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளாள்
கழங்குறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்
பயங்கெழு வைப்பிற் பல்வே லெவ்வி
நயம்புரி நன்மொழி யடக்கவு மடங்கான்
பொன்னிணர் நறுமலர்ப் புன்னை வெஃகித்
திதியனொடு பொருத அன்னிபோல
விளிகுவை கொல்லோ நீயே கிளியெனச்
சிறிய மிழற்றுஞ் செவ்வாய்ப் பெரிய
கயலென அமர்த்த வுண்கட் புயலெனப்
புறந்தாழ் பிருளிய பிறங்குகுரல் ஐம்பால்
மின்னேர் மருங்குல் குறுமகள்
பின்னிலை விடாஅ மடங்கெழு நெஞ்சே”
(அகம்.126)
எனவும்,
“மாயத்தில் வாழிய நெஞ்சே நாளும்
மெல்லியற் குறுமகள் நல்லகம் நசைஇ
அரவிரை தேரு மஞ்சுவரு சிறுநெறி
இரவென நீயும் பெறாஅய் அருள்வரப்
புல்லென் கண்ணை புலம்புகொண் டுலகத்
துள்ளவர்க் கெல்லாம் பெருநகை யாகக்
காமம் கைம்மிக வுறுதர
ஆனா வரும்படர் தலைத்தந் தோயே” (அகம்.258:8 - 15)
எனவும் வருவன, தன்னெஞ்சினை இரவு