தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5265


 

பெய்
தாலொத்த வைவனங் காப்பாள்கண் - வேலொத்தென்
நெஞ்சம்வாய்ப் புக்கொழிவு காண்பா ளெவன்கொலோ
வஞ்சாயற் கேநோவல் யான்.            (திணை.நூற்.19)

இவை பகற்குறி இரந்தன.

“எல்லும் எல்லின் றசைவுபெரி துடையேன்
மெல்லிலைப் பரப்பின் விருந்துண வொருவன்” 
                                   (அகம்.110:11-2)

எனத்  தலைவன்  இரவுக்குறி  வேண்டியதனைத் தோழி கூறியவாறு
காண்க.  இன்னும்   ‘இரட்டுறமொழிதல்’  என்பதனான்,  ‘தண்டாது’
என்பதற்குத்   தவிராது  இரப்பினு  மெனப்  பொருள்கூறிக்,  கையுறை
கொண்டுவந்து   கூறுவனவும்,   நீரேவுவன   யான்   செய்வேனெனக்
கூறுவனவுந்,  தோழி  நின்னாற்   கருதப்படுவாளை  அறியேனென்றுழி
அவன்  அறியக்கூறுவனவும்,   பிறவும்   வேறுபட  வருவனவெல்லாம்
இதன்கண் அடக்குக.

உ-ம்:

“கவளக் களியியன்மால் யானைசிற் றாளி
தவழத்தா னில்லா ததுபோல் - பவளக்
கடிகை யிடைமுத்தம் காண்டொறு நில்லா
தொடிகை யிடைமுத்தம் தொக்கு.”        (திணை.நூற்.42)

நின் வாயிதழையும் எயிற்றையும்    காணுந்தோறும்  நில்லா   என்
கையிடத்தில் இருக்கின்ற பவளக்கொடியும் முத்தும் என்க.

“நறவுக்கமழ் அலரி நாற வாய்விரிந்து
நிறந்திகழ் கமழு மிணைவாய் நெய்தல்
கண்ணித் தலையர் கருங்கைப் பரதவர்
நின்னைய ரல்லரோ நெறிதா ழோதி
ஒண்சுணங் கிளமுலை யொருஞான்று புணரின்
நுண்கயிற் றுவலை நுமரொடு வாங்கிக்
கைதை வேலி யிவ்வூர்ச்
செய்தூட் டேனோ செறிதொடி யானே”

“அறிகவளை யைய விடைமடவா யாயச்
சிறிதவள்செல் லாளிறுமென் றஞ்சிச் - சிறிதவ
ணல்கும்வாய் காணாது நைந்துருகி யென்னெஞ்சம்

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:22:32(இந்திய நேரம்)