தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5264


 

கூற்றாகவே  கூறாது தோழி கூறினாளாகக்கூறி அவ்விடத்துத் தலைவன்
மடன்மா கூறுமென்று  பொருள்   கூறின்,   ‘நாற்றமுந்   தோற்றமும்’
(தொல்.பொ.114)    என்னுஞ்    சூத்திரத்துத்   தோழி   இவற்றையே
கூறினாளென்றல் வேண்டாவாம், அது கூறியது கூறலாமாகலின்.

தண்டாது இரப்பினும் - இடந்தலைப்பாடு  முதலிய  கூட்டங்களான்
அமையாது பின்னும் பகற்குறியையும் இரவுக் குறியையும் வேண்டினும்:

உ-ம்:

“கொண்டன் மாமழை குடக்கேர்பு குழைத்த
சிறுகோ லிணர பெருந்தண் சாந்தம்
வகைசே ரைம்பா றகைபெற வாரிப்
புலர்விடத் துதிர்த்த துகள்படு கூழைப்
பெருங்கண் ணாயம் உவப்பத் தந்தை
நெடுந்தேர் வழங்கும் நிலவுமணன் முற்றத்துப்
பந்தொடு பெயரும் பரிவி லாட்டி
அருளினும் அருளா ளாயினும் பெரிதழிந்து
பின்னிலை முனியன்மா நெஞ்சே யென்னதூஉம்
அருந்துய ரவலந் தீர்க்கும்
மருந்துபிறி தில்லை யானுற்ற நோய்க்கே.”       (நற்.140)

இதில் பரிவிலாட்டியையென இரண்டாவது விரிக்க.

“கடுந்தே ரேறியுங் காலிற் சென்றும்
கொடுங்கழி மருங்கின் அடும்புமலர் கொய்தும்
கைதை தூக்கியும் நெய்தல் குற்றும்
புணர்ந்தாம் போல உணர்ந்த நெஞ்சமொடு
வைகலும் இனைய மாகவும் செய்தார்ப்
பசும்பூண் வேந்தர் அழிந்த பாசறை
யொளிறுவேல் அழுவத்துக் களிறுபடப் பொருத
பெரும்புண் உறுநர்க்குப் பேஎய் போலப்
பின்னிலை முனியா நம்வயின்
என்னென நினையுங்கொல் பரதவர் மகளே.”     (நற்.349)

தோழி நம்வயிற் பரதவர் மகளை யென்னென நினையுங்கொலென்க.

“பாலொத்த வெள்ளருவி பாய்ந்தாடிப் பல்பூப்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:22:20(இந்திய நேரம்)