தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5336


 

மல்லலம் பேரூர் மறுகின்
அல்கலு மோவா தலரா கின்றே.”

இது பகற்குறி விலக்கியது.

“நெடுமலை நன்னாட நின்வேல் துணையாக்
கடுவிசை வாலருவி நீந்தி - நடுவிருள்
இன்னா வதர்வர வீர்ங்கோதை மாதராள்
என்னாவா ளென்னுமென் னெஞ்சு.”    (ஐந்திணை ஐம்.19)

இஃது இரவுக்குறி விலக்கியது.

“இரவு வாரலை யைய விரவுவீ
யகலறை வரிக்குஞ் சாரற்
பகலும் பெறுதியிவள் தடமென் றோளே.”      (கலித்.49)

இது பகற்குறி நேர்வாள்போல் இரவுக்குறி விலக்கியது.

“திரைமேற்போந் தெஞ்சிய தெண்கழிக் கானல்
விரைமேவு பாக்கம் விளக்காக் - கரைமேல்
விடுவாய்ப் பசும்புற இப்பிகான் முத்தம்
படுவா யிருளகற்றும் பாத்து.”            (திணை.நூற்.48)

இதுவும் அது.

இவை வரவுநிலை விலக்கின.

“வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சார னாட செவ்வியை யாகுமதி
யாரஃதறிந்திசி னோரே சாரற்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.”          (குறுந்.18)

இது காதன் மிகுதி கூறியது.

‘பிறவும்’ என்றதனான்,

“கோடீ ரிலங்குவளை ஞெகிழ நாளும்
பாடில கலிழ்ந்து பனியா னாவே
துன்னரு நெடுவரைத் ததும்பிய வருவி
தண்ணென் முழவி னிமிழிசை காட்டும்
மருங்கிற் கொண்ட பலவிற்
பெருங்க னாடநின் னயந்தோள் கண்ணே”     (குறுந்.365)

இது யான் வரையுந் துணையும் ஆற்றுவளோ  என்றாற்கு  ஆற்றா
ளென்றது.

“நெடுவரை மிசையது குறுங்கால் வருடை
தினைபாய் கிள்ளை வெரூஉ நாட
வல்லைமன் றம்ம பொய்த்தல்
வல்லாய் மன்றநீ யல்லது செயலே.”        (ஐங்குறு.287)

இது தலைவனைப் பழித்தது.

“கானற் கண்டற் கழன்றுகு பைங்காய்
நீனிற விருங்கழி யுட்பட வீழ்ந்தென
வுறுகா றூக்கத் தூங்கி யாம்பல்
சிறுவெண் காக்கை யாவித் தன்ன
வெளிய விரியுந் துறைவ வென்றும்
அளிய பெரிய கேண்மை நும்போற்
சால்பெதிர் கொண்ட செம்மை யோரும்
தேறா நெஞ்சங்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:36:26(இந்திய நேரம்)