Primary tabs


கையறுபு வாட
நீடின்று விரும்பா ராயின்
வாழ்தன்மற் றெவனோ தேய்கமா தெளிவே.”
(நற்.345)
இஃது ஆற்றாத தலைவியைக் கடிதின் வரைவேனென்று தலைவன்
தெளிவிக்கப் புக்குழித் தோழி தெளிவிடை விலக்கியது.
“குன்றக் குறவன் காதன் மடமகண்
மென்றோட் கொடிச்சியைப் பெறற்கரிது தில்ல
பைம்புறப் படுகிளி யோப்பலள்
புன்புல மயக்கத்து விளைந்தன தினையே.” (ஐங்குறு.260)
இது புனங்காவல் இனியின்று என்றது.
“என்னாங்கொ னீடி லினவேங்கை நாளுரைப்பப்
பொன்னாம்போர் வேலவர் தாம்புரிந்த - தென்னே
மருவியா மாலை மலைநாடன் கேண்மை
யிருவியா மேன லினி.”
(திணை.நூற்.18)
இது, தினை அரிகின்றமையுஞ் சுற்றத்தார் பொருள் வேட்கையுங் கூறியது.
“வெறிகமழ் வெற்பவென் மெய்ந்நீர்மை கொண்ட
தறியாண்மற் றன்னோ அணங்கணங்கிற் றென்று
மறியீர்த் துதிரந்தூய் வேலற் றரீஇ
வெறியோ டலம்வரும் யாய்.”
(ஐந்திணை ஐம்.20)
இது வெறியச்சுறுத்தியது.
“இனமீ னிருங்கழி யோத முலாவ
மணிநீர் பரக்குந் துறைவ தகுமோ
குணநீர்மை குன்றாக் கொடியன்னாள் பக்கம்
நினைநீர்மை யில்லா வொழிவு.”
(திணை.ஐம்.44)
இஃது அருளவேண்டும் என்றது.
“மூத்தோ ரன்ன வெண்டலைப் புணரி
இளையோ ராடும் வரிமனை சிதைக்குந்
தளையவிழ் தாழைக் கானலம் பெருந்துறைச்
சில்செவித் தாகிய புணர்ச்சி யலரெழ
இல்வயின் செறித்தமை அறியாய் பன்னாள்
வருமுலை வருத்த வம்பகட்டு மார்பின்
தெருமரல் உள்ளமொடு வருந்து நின்வயின்
நீங்குக வென்றியான் யாங்ஙன மொழிகோ
அருந்திறற் கடவுள் செல்லூர்க் குணாது
பெருங்கடன் முழக்கிற் றாகி யாணர்
இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர்
கடுங்கண் கோசர் நியம மாயினும்
உறுமெனக் கொள்குநர் அல்லர்
நறுநுதல் அரிவை பாசிழை விலையே.”
(அகம்.90)
இது, பொருண்மிகக் கொடுத்தல் வேண்டுமென்பது.
இன்னும் வரைவு