Primary tabs


தோர் இன்னாக்காலத்து என் செய்கின்றா யெனக் காதற்பற்றி
இரங்குதல்.
தோழியை வினவலும்-நின்றோழிக்கு இவ்வேறுபாடு
எற்றினா னாயிற்
றென்றாற்போலத் தோழியை வினாவுதலும்:
உ-ம்:
“நெடுவே லேந்தி நீயெமக் கியாஅர்
தொடுத லோம்பென வரற்றலு மரற்றும்
கடவுள் வேங்கையுங் காந்தளு மலைந்த
தொடலைக் கண்ணி பரியலு மென்னும்
பாம்புபட நிவந்த பயமழைத் தடக்கைப்
பூம்பொறிக் கழற்கா லாஅய் குன்றத்துக்
குறுஞ்சுனை மலர்ந்த குவளை நாறிச்
சிறுதேன் கமழ்ந்த வம்மெல் லாகம்
வாழியெம் மகளை யுரைமதி இம்மலைத்
தேம்பொதி கிளவியென் பேதை
யாங்கா டினளோ நின்னொடு பகலே.”
என வரும்.
இது செவிலி தோழியை வினாயது.
“ஓங்குமலை நாட வொழிகநின் வாய்மை
காம்புதலை மணந்த கல்லதர்ச் சிறுநெறி
உறுபகை பேணா திரவின் வந்திவள்
பொறிகிள ராகம் புல்ல தோள்சேர்
பறுகாற் பறவை யளவில மொய்த்தலின்
கண்கோ ளாக நோக்கிப் பண்டு
மினையை யோவென வினவினள் யாயே
யதனெதிர் சொல்லா ளாகி அல்லாந்
தென்முக நோக்கி யோளே யன்னா
யாங்குணர்ந்த துய்குவள் கொல்லென மடுத்த
சாந்த ஞெகிழி காட்டி
யீங்கா யினவா லென்றிசின் யானே.”
(நற்.55)
இது, செவிலி வினாயினமையைத் தோழி கொண்டு கூறினாள்.
தெய்வம் வாழ்த்தலும் - இன்னதொன்று நிகழ்ந்ததெனத் துணிந்த
பின்னர்த் தன்
மகளொடு தலைமகனிடை நிகழ்ந்த ஒழுக்கம்
நன்னர்த் தாகவெனத் தெய்வத்திற்குப் பராவுதலும்:
உ-ம்:
“பெருமலைச் சிலம்பின் வேட்டம் போகிய
செறிபடை யம்பின் வல்விற் கானவன்
பொருதுதொலை யானை வெண்கோடு கொண்டு
நீர்திகழ் சிலம்பின் நன்பொன் அகழ்வோன்
கண்பொரு திமைக்குந் திருமணி கிளர்ப்ப
வைந்நுதி வான்மருப் பொடிய வுக்க
தெண்ணீர் ஆலி கடுக்கு முத்த