தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5358


 

ந்தவாறும், அதன் சுரிதகத்துக் கூட்டமுண்மை கூறுதலின் துணைச்சுட்டுக்
கிளவி கிழவிய தாயவாறுங் காண்க.

“கொடியவுங்   கோட்டவும்”   (கலி.54)   என்பதன்    சுரிதகத்துச்செவிலிக்கு உரையாயெனக் கூறியவாறுங் காண்க. (32)

களவின்கண்தாயென்று சிறப்பிக்கப்படுவாள் செவிலி எனல்

124. ஆய்பெருஞ் சிறப்பின் அருமறை கிளத்தலின்
தாயெனப் படுவோள் செவிலி யாகும்.

இது முற்கூறிய செவிலி சிறப்புக் கூறுகின்றது.

(இ-ள்.)  ஆய்பெருஞ்  சிறப்பின் - தாய்த்  தாய்க்கொண்டு  உயிர் ஒன்றாய்   வருகின்றாளென்று    ஆராய்ந்து   துணிப்பட்ட   பெருஞ் சிறப்புக் காரணமாக;  அருமறை    கிளத்தலின்    -     கூறுதற்கரிய மறை    பொருளெல்லாங்    குறிப்பானன்றிக்   கூற்றாற்    கூறத்தக்காளாதலின்;   தாயெனப்படுவோள்   செவிலி  ஆகும்  -  தாயென்று சிறப்பித்துச் சொல்லப்படுவாள் செவிலியேயாம் எ-று.

எனவே   ஈன்ற  தாயினுங்  களவின்கட்  சிறந்தாள் இவளென்றார். கற்பிற்கு  இருவரும்  ஒப்பாராயிற்று.  செவிலி  சிறந்தமை  சான்றோர் செய்யுளுட் பலருங் கூறியவாறு காண்க. (33)

சிறப்புடைத் தோழியாவாள் இவளெனல்

125. தோழி தானே செவிலி மகளே.

இது தோழியது சிறப்புணர்த்துகின்றது.

(இ-ள்.)  தோழி தானே - தோழியர்  பலருள்ளும்  ஒருத்தியெனப்
பிரிக்கப்படுவாள்;  செவிலி  மகளே  - முற்கூறிய செவிலியுடைய மகள் எ-று.

இதற்கும்  அருமறை  கிளத்தல்  - அதிகாரத்தாற் கொள்க. தாய்த் தாய்க்  கொண்டு   வருகின்றமையின்   உழுவலன்பு   போல்வதோர் அன்பு உடையர்  இருவருமென்று  கொள்க.  இதனானே  களவிற்குத் தோழியே சிறந்தாளாயிற்று; அது சான்றோர் செய்யுளுட் காண்க. (34)

தோழி சூழ்தற்குமுரியளெனல்

126. சூழ்தலு முசாத்துணை நிலைமையிற் பொலிமே.
இதுவுந் தோழி சிறப்பினையே கூறுகின்றது.

(இ-ள்.) உசாத்துணை  நிலைமையின் - தலைமகனுந் தலை மகளும்
உசாவுதற்குத்    துணைமைசான்ற    நிலைமையினாலே;    சூழ்தலும் பொலிமே - புணர்ச்சி யுண்மையை ஏழுவகையானுஞ்  சூழ்தற்கண்ணும் பொலிவுபெறும் எ-று.

எனவே, இம்மூன்று நிலைக்குந் தோழி உரியள் என்றார். உதாரணம்
முற்காட்டியவற்றுட் காண்க. (35)

தோழி சூழ்ச்சி இத்துணைப்பகுதியெனல்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:40:43(இந்திய நேரம்)