Primary tabs


127. குறையுற உணர்தல் முன்னுற உணர்தல்
இருவரு முள்வழி அவன்வர உணர்தலென
மதியுடம் படுத்தல் ஒருமூ வகைத்தே.
இஃது, அத்தோழி சூழ்ச்சி இத்துணைப் பகுதித்து என்கின்றது.
(இ-ள்.) குறையுற உணர்தல் - தலைவன் தோழியை இரந்து குறையுற்றவழி உணர்தல்; முன் உற உணர்தல். முன்னம் மிக உணர்தல்; இருவரும் உள்வழி அவன் வர உணர்தல் - தலைவியுந் தோழியும் ஒருங்கிருந்தவழித் தலைவன் வருதலான் தலைவன் குறிப்புந் தலைவி குறிப்புங் கண்டுணர்தல்; என மதியுடம்படுத்தல் ஒரு மூவகைத்தே - என்று இருவர் கருத்தினையுந் தன் கருத்தினோடு ஒன்றுபடுத்துணர்தல் ஒரு மூன்று கூற்றினையுடைத்து எ-று.
எண்ணுதல் எண்ணென்றாற்போல முன்னுதல் ‘முன்’னென நின்றது.
உயிர்கலந்தொன்றலிற் குறிப்பின்றியும் பாகமுணர்வாள் குறிப்புப் பெற்றுழி
மிகவுணரும் என்று கொள்க. இது மூவர் மதியினையும் ஒன்று படுத்துதலின் மதியுடம்படுத்த லென்று பெயராயிற்று. இம்மூன்றுங் கூடிய பின்னரல்லது மதியுடம்படுத்த லின்றென்றற்கு மூவகைத்தென்று
ஒருமையாற் கூறினார். ‘முன்னுற’வென்றதனை ‘முந்துற’ வென்றாலோ வெனின் குறையுறுதலான உணர்தல் அவன்
வருதலான் உணர்தலென்று இரண்டற்குக் காணரங் கூறுதலின், இதற்குங் குறிப்பு மிகுதலான் உணர்தலெனக்காரணங் கொடுத்தல் வேண்டுமென்றுணர்க. ‘நாற்றமுந் தோற்றமும்’ (தொல்.பொ.114) என்பதனுட் கூறியவாறன்றி முன்னுறவை
இடைவைத்தார், அவ்விரண்டினான் உணருங்காலும் இக்
குறிப்பான் உணரவேண்டு மென்றற்கு. இம் மூன்றும் முற்கூறினவேனும்
ஒரோவொன்றாற் கூட்டமுணரின் தலைவியை
நன்குமதித்திலளாவ ளென்றற்கு இம்மூன்றும்
வேண்டுமென்று ஈண்டுக்
கூறினார்.
உ-ம்:
“கோனே ரெல்வளை தெளிர்ப்ப நின்போல்
யானு மாடிக் காண்கோ தோழி.”
இது கூட்ட முணராதள்போல நாணிற்கு மாறாகாமாற் கூறலின்,
முன்னுறவுணர்தல்.
“நின்னின் விடாஅ நிழற்போற் றிரிதருவாய்
என்னீ பெறாத திதென்.” (கலி.61)
இது குறையுற வுணர்தல்.
“ஏனல் காவ லிவளு மல்லள்”
என்பது அவன் வரவுணர்தல். (36)
தோழி மதியுடம்படுத்தபின்னல்லது தலைவனிரந்து
பின்னில்லானெனல்
128. அன்ன வகையா னுணர்ந்தபி னல்லது
பின்னிலை முயற்