Primary tabs


ன்றெவன் கொல்லோ கண்டிகு மற்றவன்
நல்கா மையின் அம்ப லாகி
ஒருங்குவந் துவக்கும் பண்பின்
இருஞ்சூ ழோதி ஒண்ணுதற் பசப்பே. ” (அகம்.102)
இது மனையகம் புக்கது.
தலைவி புறத்துப் போகின்றாளெனச் செவிலிக்கு ஓர் ஐயம் நிகழ்ந்தவழிப் பின்னர் மனையகத்துப் புணர்ச்சி நிகழுமென்றுணர்க. (40)
பகற்குறியிட மிதுவெனல்
132. பகற்புணர் களனே புறனென மொழிப
அவளறி வுணர வருவழி யான.
இது முறையானே பகற்குறி உணர்த்துகின்றது.
(இ-ள்.)
அவள் அறிவு உணர வருவழி ஆன பகற்புணர்களனே -
களஞ்சுட்டிய தலைவி அறிந்தவிடந் தலைவன் உணரும்படியாக
வருவதோரிடத்து உண்டான பகற்புணருங் குறியிடத்தை; புறன் என மொழிப - மதிற்புறத்தேயென்று கூறுவர் ஆசிரியர் எ-று.
அறிவு: ஆகுபெயர்.
உ-ம்:
“புன்னையங் கானற்புணர்குறி வாய்த்த
மின்னே ரோதியென் றோழிக்கு”
எனவும்,
“பூவே புன்னையந் தண்பொழில்
வாவே தெய்ய மணந்தனை செலற்கே.” (அகம்.239)
எனவும் வருவன பிறவுங் கொள்க. (41)
அல்லகுறிப்படுதலுந் தோழிக்குரித்தெனல்
133. அல்லகுறிப் படுதலும் அவள்வயி னுரித்தே
அவன்குறி மயங்கிய அமைவொடு வரினே.
இது தோழி அல்ல குறிப்படுமாறு கூறுகின்றது. இருவகைக் குறி
பிழைப்பாகியவிடத்தும் என்புழித் தலைவி அல்ல குறிப்புடுதல் கூறிற்று.
(இ-ள்.)
அவன் குறி - தலைவன் தன்வரவு அறிவிக்குங் கருவிகள்;
மயங்கிய அமைவொடு வரின் - அவன் செயற்கையானன்றி இயற்கை
வகையானே நிகழ்ந்து
தோழி மயங்கிய அமைதியோடே வருமாயின்;
அல்லகுறிப் படுதலும் - குறியிடத்துக் கூட்டுங்கால் அவ்வல்லவாகிய
குறியிலே மயங்குதலும்; அவள்வயின் உரித்து - அத் தோழியிடத்து உரித்து எ-று.
வெறித்தல் வெறியாயினாற்போலக் குறித்தல் குறியாயிற்று. அக் கருவி புனலொலிப்படுத்தல் முதலியன.
உ-ம்:
“கொடுமுண் மடற்றாழைக் கூன்புற வான்பூ
இடையு ளிழுதொப்பத் தோன்றிப் - புடையெலாம்
தெய்வம் கமழும் தெளிகடற் றண்சேர்ப்பன்
செய்தான் றெளியாக் குறி” (ஐந்திணை ஐம்.49)
இஃது அல்லகுறிப்பட்டமை சிறைப்புறமாகக் கூறியது.
“எறிசுறா நீள்கடல் ஓத முலாவ
நெறியிறாக் கொட்கு நிமிர்கடற்றண் சேர்ப்பன்
அறிவுறா வின்சொ லணி