தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5369


 

டுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரவிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே.

என்பது    சூத்திரம்.    இவ்வோத்துக்    களவு    கற்பென்னுங் 
கைகோளிரண்டனுட்     கற்புணர்த்தினமையிற்      கற்பியலென்னும்
பெயர்த்தாயிற்று.  கற்பியல்   கற்பினது  இயலென    விரிக்க.  இயல்,
இலக்கணம்.  அஃது ஆகுபெயரான்  ஓத்திற்குப்  பெயராயிற்று.  அது
கொண்டானிற் சிறந்த தெய்வம் இன்றெனவும், அவனை   இன்னவாறே
வழிபடுகவெனவும் இருமுதுகுரவர் கற்பித்தலானும் ‘அந்தணர் திறத்துஞ்
சான்றோர்   தேஎத்தும்’   ‘ஐயர்   பாங்கினும்   அமரர்ச்  சுட்டியும்’
(தொல்.பொ.146)   ஒழுகும்   ஒழுக்கந்  தலைமகன்   கற்பித்தலானுங்
கற்பாயிற்று.   இனித்  தலைவனுங்  களவின்  கண்  ஓரையும் நாளுந்
தீதென்று  அதனைத்  துறந்தொழுகினாற்  போல ஒழுகாது  ஓத்தினுங்
கரணத்தினும்  யாத்த  சிறப்பிலக்கணங்களைக்  கற்பித்துக்   கொண்டு
துறவறத்திற் செல்லுந் துணையும் இல்லற  நிகழ்த்துதலிற்   கற்பாயிற்று.
களவு  வெளிப்பட்ட  பின்னராயினும்  அது  வெளிப்படாமையாயினும்
உள்ளப்புணர்ச்சி   நிகழ்ந்த   வழியாயினும்   வரைதல்  அக்களவின்
வழியாதலின்   மேலதனோடு  இயைபுடையத்தாயிற்று.  இச்  சூத்திரம்
கற்பிற்கெல்லாம் பொது விலக்கணங் கூறுகின்றது.

(இ-ள்.) கற்பு எனப்படுவது -  கற்பென்று சிறப்பித்துக் கூறப்படுவது;
கரணமொடு  புணர  -  வேள்விச்  சடங்கோடே கூட; கொளற்கு உரி
மரபிற் கிழவன் - ஒத்த குலத்தோனும் மிக்க குலத்தோனு
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 26-08-2017 11:16:16(இந்திய நேரம்)