தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5376


 

னெறிப் படருந் தொன்னலப் பொருளினும்
பெற்ற தேஎத்துப் பெருமையி னிலைஇக்
குற்றஞ் சான்ற பொருளெடுத் துரைப்பினும்
நாமக் காலத் துண்டெனத் தோழி
யேமுறு கடவு ளேத்திய மருங்கினும்
அல்லல் தீர வார்வமோ டளைஇச்
சொல்லுறு பொருளின் கண்ணுஞ் சொல்லென
ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது
வானோ ரமுதம் புரையுமா லெமக்கென
அடிசிலும் பூவுந் தொடுதற் கண்ணும்
அந்தணர் திறத்துஞ் சான்றோர் தேஎத்தும்
அந்தமில் சிறப்பிற் பிறர்பிறர் திறத்தினும்
ஒழுக்கங் காட்டிய குறிப்பினும், ஒழுக்கத்துக்
களவினு ணிகழ்ந்த அருமையைப் புலம்பி
அலமர லுள்ளமொ டளவிய விடத்தும்
அந்தரத் தெழுகிய வெழுத்தின் மான
வந்த குற்றம் வழிகெட வொழுகலும்
அழியல் அஞ்சலென் றாயிரு பொருளினுந்
தானவட் பிழைத்த பருவத் தானும்
நோன்மையும் பெருமையு மெய்கொள வருளிப்
பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தித்
தன்னின் ஆகிய தகுதிக் கண்ணும்
புதல்வற் பயந்த புனிறுசேர் பொழுதின்

நெய்யணி மயக்கம் புரிந்தோ ணோக்கி
ஐயர் பாங்கினு மமரர்ச் சுட்டியுஞ்
செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற் கண்ணும்
பயங்கெழு துணையணை புல்லிய புல்லாது
உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப்
புல்கென முன்னிய நிறையழி பொழுதின்
மெல்லென் சீறடி புல்லிய விரவினும்
உறலருங் குண்மையி னூடல் மிகுத்தோளைப்
பிறபிற பெண்டிரிற் பெயர்த்தற் கண்ணும்
பிரிவி னெச்சத்துப் புலம்பிய இருவரைப்
பிரிவின் நீக்கிய பகுதிக் கண்ணும்
நின்றுநனி பிரிவின் அஞ்சிய பை

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:44:15(இந்திய நேரம்)