Primary tabs


யுளுஞ்
சென்றுகை யிகந்து பெயர்த் துள்ளிய வழியுங்
காமத்தின் வலியுங் கைவிடி னச்சமும்
தானவள் பிழைத்த நிலையின் கண்ணும்
உடன்சேறல் செய்கையோடு அன்னவை பிறவும்
மடம்பட வந்த தோழிக் கண்ணும்
வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும்
மீட்டுவர வாய்ந்த வகையின் கண்ணும்
அவ்வழி பெருகிய சிறப்பின் கண்ணும்
பேரிசை யூர்திப் பாகர் பாங்கினும்
காமக் கிழத்தி மனையோ ளென்றிவர்
ஏமுறு கிளவி சொல்லிய வெதிருஞ்
சென்ற தேஎத் துழப்புநனி விளக்கி
இன்றிச் சென்ற தந்நிலை கிளப்பினும்
அருந்தொழின் முடித்த செம்மற் காலை
விருந்தொடு நல்லவை வேண்டற் கண்ணும்
மாலை யேந்திய பெண்டிரும் மக்களுங்
கேளி ரொழுக்கத்துப் புகற்சிக் கண்ணும்
ஏனை வாயி லெதிரொடு தொகைஇப்
பண்ணமை பகுதிமுப் பதினொரு மூன்றும்
எண்ணருஞ் சிறப்பிற் கிழவோன் மேன.
இது, பார்ப்பார் முதலிய பன்னிருவருங்
(501 - 2) கற்பிடத்துக்
கூற்றிற்கு உரியராயினும் அவருள் தலைவன் சிறந்தமையின் அவன்
கூற்றெல்லாந் தொகுத்துக் களவிற் கூறியாங்கு முற் கூறுகின்றது.
(இ-ள்.)
கரணத்தின் அமைந்து முடிந்த காலை - ஆதிக்கரணமும்
ஐயர் யாத்த கரணமுமென்னும்
இருவகைச்சடங்கானும் ஒரு
குறைபாடின்றாய் மூன்று இரவின் முயக்கம் இன்றி ஆன்றோர்க்கு
அமைந்த வகையாற் பள்ளிசெய்து ஒழுகி நான்காம் பகலெல்லை
முடிந்தகாலத்து:
ஆன்றோராவர், மதியுங் கந்தருவரும் அங்கியும்.
நெஞ்சுதளை அவிழ்ந்த புணர்ச்சிக்கண்ணும் - களவிற் புணர்ச்சி
போலக் கற்பினும் மூன்று நாளுங் கூட்டமின்மையானும் நிகழ்ந்த
மனக்குறை தீரக்கூடி