தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5379


 

றப்   பகுதியை    நிகழ்த்துமாறு   பலவகையாகக்  காணும்  தன்மை
உணர்வுடையோன்   ஓதிய   நூல்   விரியுமாறுபோல   விரியாநின்ற
தெனவும்.     இவள்    கொடைநலம்    வள்ளன்மை    பூண்டான்
பொருளனைத்தெனவும்,      இவளது    கற்புச்சிறப்புப்     பிறர்க்கு
அச்சஞ்செய்தலின்  வாளனைத்தெனவுந்,  தலைவன் அவளுரிமைகளை வியந்து கூறியவாறு காண்க.

நன்னெறிப்  படரும்  தொல்  நலப் பொருளினும் - இல்லறத்திற்கு
ஓதிய  நெறியின்கண்  தலைவி  கல்லாமற் பாகம்பட ஒழுகுந் (பழ.6:4)
தொன்னலஞ் சான்ற பொருளின் கண்ணும்:

பொருள்வருவாய்   இல்லாத  காலமும்   இல்லற    நிகழ்த்துதல்
இயல்பாயிருத்தற்குத் தொன்னலமென்றார்.

உ-ம்:

“குடநீரட் டுண்ணும் இடுக்கண் பொழுதும்
கடல்நீர் அறவுண்ணுங் கேளிர் வரினுங்
கடன்நீர்மை கையாறாக் கொள்ளும் மடமொழி
மாதர் மனைமாட்சி யாள்.”              (நாலடி.39-2)

இஃது  ஒரு  குடம்  நீராற் சோறமைத்து உண்ணுமாறு மிடிப்பட்ட
காலத்தும் மனைக்கு மாட்சிமையுடையாள் கடல் நீரை வற்ற உண்ணுங்
கேளிர் வரினும் இல்லற நிகழ்த்துதலைக் கைக்கு நெறியாகக் கொள்ளு
மெனத் தலைவன் வியந்து கூறினான். 

பெற்ற  தேஎத்துப் பெருமையின் நிலைஇக் குற்றஞ்சான்ற பொருள்
எடுத்து   உரைப்பினும்  -  தலைவி   அங்ஙனம்   உரிமை  சான்ற
இடத்து  அவளைப்  பெருமையின்கண்ணே  நிறுத்திக்  குற்றமமைந்த
களவொழுக்கத்தை   வழுவியமைந்த  பொருளாகக்  கேளிர்க்காயினும்
பிறர்க்காயினும் உரைப்பினும்: 

அது  களவொழுக்கத்தையுந் தீய ஓரையுள்ளுந் துறவாது   ஒழுகிய
குற்றத்தையும் உட்கொணடும் அதனைத் தீதென்னாமற் கூறுதலாம்.

உ-ம்:

“நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும்
மேலாறு மேலுறை சோரினும் - மேலாய
வல்லாளாய் வாழுமூர் தற்புகழும் மாண்கற்பின்
இல்லாள் அமைந்ததே இல்.”

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:44:49(இந்திய நேரம்)