Primary tabs


ன் கண்ட கனவுதான்
நனவாகக் காண்டை நறுநுதால் பன்மாணுங்
கூடிப் புணர்ந்தீர் பிரியன்மின் நீடிப்
பிரிந்தீர் புணர்தம்மின் என்பன போல
அரும்பவிழ் பூஞ்சினை தோறும்இருங்குயில்
ஆனா தகவும் பொழுதினால் மேவர
நான்மாடக் கூடன் மகளிரு மைந்தருந்
தேனிமிர் காவிற் புணர்ந்திருந் தாடுமார்
ஆனா விருப்போ டணியயர்வு காமற்கு
வேனில் விருந்தெதிர் கொண்டு.”
(கலி.92)
எனவே, புல்லாதிருந்தாளென்றதனான் ஊடன்மிகுதி தோன்றுவித்து
மகளிரும் மைந்தரும் வேனில் விழாச் செய்கின்றார் நாமும்
அது செய்யவேண்டுமென்று கூறியவாறு காண்க.
பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப் பிரிவின் நீக்கிய பகுதிக்
கண்ணும் - பரத்தையிற் பிரிவினது தவிர்ச்சிக்கண்ணே
தனிமை
யுற்றிருந்த தலைமகனையுந் தலைமகளையுந்
தனதருளினானே தானும்
பிரிவி னெச்சத்துப் புலம்பி நின்றான் ஒருவன் தலைவிதனைக்
கண்டருளுதற்கு அப்பிரிவினின்று நீக்கிய கூறுபாட்டின் கண்ணும்:
பிரிந்து வந்துழியல்லது புலத்தல் பிறவாமையின் ‘எச்சத்து’
என்றார்.
உதாரணம் வந்துழிக் காண்க. இதுவும் ஊடற்பகுதியாம்.
நின்று நனி பிரிவின் அஞ்சிய பையுளும் - முன்னில்லா தொரு
சிறைப் போய் நின்று நீட்டித்துப்
பிரிவினான் தலைவன் அஞ்சிய
நோயின்கண்ணும்: இது துனி.
“மையற் விளங்கிய” என்னும் மருதக்கலியுள்,
“ஏதப்பா டெண்ணிப் புரிசை வியலுள்ளோர்
கள்வரைக் காணாது கண்டேமென் பார்போலச்
சேய்நின்று செய்யாத சொல்லிச் சினவனின்
ஆணை கடக்கிற்பார் யார்.”
(கலி.81)
எனச்
சேய்நின்றென்றதனான் துனித்து
நின்றவாறுஞ்,
சினவலென்றதனாற் பிரிவு நீட்டித்தவாறும், நின்னாணை கடக்கிற்பார்
யாரென அஞ்சியவாறுங் கூறியவாறு காண்க.
“பொய்யெல்லா மேற்