Primary tabs


வருந்திக் கிடந்த தலைவியை
அணுகித் தான் கூடுதலைக் கருதின
நிறையழிந்த காலத்தே அவளது
மெத்தென்ற சிறிய அடியைத்
தீண்டிய இரத்தற்கண்ணும்:
இதனானே மகப்பெறுதற்கு முன்னர்
அத்துணை யாற்றாமை
எய்திற்றலளென்றார். இப்பிரிவு காரணத்தான்
தலைவனும் நிறையழிவ
னென்றார்.
“அகன் றுரை யணிபெற” என்னும் மருதக்கலியுள்,
“என்னைநீ செய்யினும் உணர்ந்தீவார் இல்வழி
முன்னடிப் பணிந்தெம்மை உணர்த்திய வருதிமன்
நிரைதொடி நல்லவர் துணங்கையுட் டலைக்கொள்ளக்
கரையிடைக் கிழிந்தநின் காழகம்வந்
துரையாக்கால்.”
(கலி.73)
என இதனுட் சீறடிப் புல்லிய இரவினைத்
தலைவி கூறியவாறு
காண்க. தலைவன் கூற்று வந்துழிக் காண்க.
உறலருங்கு உண்மையின் ஊடல்
மிகுத்தோளைப் பிறபிற
பெண்டிரிற் பெயர்த்தற்கண்ணும் - தலைவற்குச்
சாந்தழி வேருங் குறி
பெற்றார் கூந்தல் துகளும்
உண்மையின் அவனைக் கூடுதல்
அருமையினானே ஊடன் மிகுந்த
தலைவியைப் பிறபிற பெண்டிர்
ஏதுவாக ஊடல் உணர்த்துதலிடத்தும்:
என்றது உலகத்துத் தலைவரொடு கூடுந்
தலைவியர் மனையறத்த
இவ்வாறொழுகுவரென அவர் ஒழுக்கம் காட்டி
அறத்துறைப்படுத்தலாம்.
மறைவெளிப்படுத்தலுந் தமரிற்பெறுதலும்
மலிவும் முறையே கூறிப்
பின்னர்ப் புலவி நிகழ்ந்து ஊடலாய்
மிகுதலின் ‘ஊடல்மிகுத்தோள்’
என்றார், இரத்தற் பாலினும் பெண்பால்
காட்டிப் பெயத்தலிற் ‘பிறபிற
பெண்டிர்’ என்றார்.
“புனம்வளர் பூங்கொடி” என்னும் மருதக்கலியுள்,
“ஒருத்தி, புலவியாற் புல்லா திருந்தாள் அலவுற்று
வண்டினம் ஆர்ப்ப இடைவிட்டுக் காதலன்
தண்டா ரகலம் புகும்”
(கலி.92)
எனக் கூறி,
“அனவகை யா