தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5456


 

மற் பெறுகற்பின்”                           (கலி.77)

எனக் கூறிய தலைவி,

“கடைஇய நின்மார்பு தோயலம் என்னும்
இடையு நிறையும் எளிதோநிற் காணின்
கடவுபு கைத்தங்கா நெஞ்சென்னுந் தம்மோ
டுடன்வாழ் பகையுடை யார்க்கு.”               (கலி.77)

என்புழி   நிற்காணிற்   கடவுபு  கைத்தங்கா நெஞ்செனவே அவன்
ஆற்றாமை   கண்டருளி  நெஞ்சு  ஏவல்செய்தென வேறொரு பொருள்
பயப்பக் கூறித் தன் அன்பினைக் கரந்தவாறு காண்க.

“கூன்முண்   முள்ளி” (அகம்.26) என்பதனுட் “சிறுபுறங் கவையினன்
”என   அவன்   வருந்தியது   ஏதுவாகத் தான் ‘மண்போன் ஞெகிழ்ந்
தே’னென  அருண்   முந்துறுத்தவாறும்,  இவை பாராட்டிய  பருவமும்
உளவென அன்பு   பொதிந்து  கூறியவாறும்,  ஆண்டும் பணிந்தமொழி
வெளிப்படாமல்    நெஞ்சறை  போகிய    அறிவினேற்    கெனத்தன்
அறிவினை    வேறாக்கி   அதன்மேலிட்டுக் கூறியவாறுங் காண்க. (20)

தலைவியுந் தோழியு மலரெழுகின்றதெனக் கூறற்கு முரியரெனல்

162. களவும் கற்பும் அலர்வரை வின்றே.

இதுவுந் தலைவிக்குந் தோழிக்கும் உரிய கூற்றுக் கூறுகின்றது.

(இ-ள்.) களவின்கண்ணுங் கற்பின்கண்ணும்   அலரெழுகின்றதென்று
கூறுதல் தலைவிக்குந் தோழிக்கும் நீக்குநிலைமையின்று எ-று.

வரைவின்றெனப்   பொதுப்படக்    கூறினமையான்   இருவரையுங்
கொண்டாம்.       தலைவன்     ஆங்குக்    கூறுவனாயிற்  களவிற்
கூட்டமின்மையுங்  கற்பிற் பிரிவின்மையும்  பிறக்கும். ‘ஒப்பக்கூற’ (666)
லென்னும் உத்திபற்றிக் களவும் உடனோதினார் சூத்திரஞ்  சுருங்குதற்கு.
‘களவலராயினும்’  (தொல்.கள.24)    எனவும்,      ‘அம்பலு  மலரும்’
(தொல்.கள.48)  எனவுங்  களவிற் கூறியவை    அலராய்  நிகழ்ந்தவழி
வேறுசில   பொருண்மை    பற்றிக் கூறுதற்கு வந்தன.  அவை  அலர்
கூறப் பெறுப என்றற்கு வந்தன வல்லன உணர்க.

உ-ம்:

“கண்டது மன்னு மொருநாள் அலர்மன்னுந்
திங்களைப் பாம்புகொண் டற்று.”            (குறள்.1146)

இது களவு.

“வேதின வெரிநி னோதி முதுபோத்
தாறுசென் மாக்கள் புட்கொளப் பொருந்துஞ்
சுரனே சென்றனர் காதலர் உரனழிந்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:59:50(இந்திய நேரம்)