தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-moolam

  • ஓலை எண் : 

  • சொல்லதிகாரம் - மூலம்
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   215


    உயர் மொழிக் கிளவியும் உரியவால் அவட்கே.

    237 வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்தல்
    தா இன்று உரிய, தத்தம் கூற்றே.

    238 உடனுறை, உவமம், சுட்டு, நகை, சிறப்பு, எனக்
    கெடல் அரு மரபின் உள்ளுறை ஐந்தே.

    239 அந்தம் இல் சிறப்பின் ஆகிய இன்பம்
    தன்வயின் வருதலும் வகுத்த பண்பே.

    240 மங்கல மொழியும், வைஇய மொழியும்,
    மாறு இல் ஆண்மையின் சொல்லிய மொழியும்,
    கூறிய மருங்கின் கொள்ளும்' என்ப.

    241 சினனே, பேதைமை, நிம்பிரி, நல்குரவு,
    அனை நால் வகையும் சிறப்பொடு வருமே.

    242 அன்னை', 'என்னை,' என்றலும் உளவே;
    'தொல் நெறி முறைமை சொல்லினும் எழுத்தினும்
    தோன்றா மரபின' என்மனார் புலவர்.

    243 ஒப்பும் உருவும் வெறுப்பும் என்றா,
    கற்பும் ஏரும் எழிலும் என்றா,
    சாயலும் நாணும் மடனும் என்றா,
    நோயும் வேட்கையும் நுகர்வும் என்று, ஆங்கு
    ஆவயின் வரூஉம் கிளவி எல்லாம்
    நாட்டியல் மரபின் நெஞ்சு கொளின் அல்லது,
    காட்டலாகாப் பொருள' என்ப.

    244 இமையோர் தேஎத்தும் எறி கடல் வரைப்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:35:26(இந்திய நேரம்)