Primary tabs
-
சொல்லதிகாரம் - மூலம்உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்

தன் சீர் எழுத்தின் சின்மை மூன்றே
354 மூச் சீரானும் வரும் இடன் உடைத்தே
355 அசை கூன் ஆகும், அவ்வயினான.
356 சீர் கூன் ஆதல் நேரடிக்கு உரித்தே
357 ஐவகை அடியும், விரிக்கும் காலை,
மெய் வகை அமைந்த பதினேழ் நிலத்தும்,
எழுபது வகையின் வழு இல ஆகி,
அறுநூற்று இருபத்தைந்து ஆகும்மே.358 ஆங்ஙனம் விரிப்பின், அளவு இறந்தனவே
பாங்குற உணர்ந்தோர் பன்னும் காலை.359 ஐவகை அடியும் ஆசிரியக்கு உரிய
360 விராஅய் வரினும் ஒரூஉ நிலை இலவே
361 தன் சீர் வகையினும், தளை நிலை வகையினும்,
இன் சீர் வகையின், ஐந்து அடிக்கும் உரிய;
தன் சீர் உள்வழித் தளை வகை வேண்டா.362 சீர் இயை மருங்கின் ஓர் அசை ஒப்பின்,
ஆசிரியத் தளை என்று அறியல் வேண்டும்.363 'குறளடி முதலா அளவடிகாறும்
உறழ் நிலை இலவே வஞ்சிக்கு' என்ப364 அளவும் சிந்தும் வெள்ளைக்கு உரிய
தளை வகை ஒன்றாத் தன்மையான365 அளவடி மிகுதி உளப்படத் தோன்றி,
இரு நெடிலடியும் கலியிற்கு உரிய.366 'நிரை முதல் வெண்சீர் வந்து நிரை தட்பினும்,
வரை நிலை இன்றே அவ் அடிக்கு' என்ப.367 விராஅய தளையும் ஒரூஉ நிலை இன்றே


