தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-moolam

  • ஓலை எண் : 

  • சொல்லதிகாரம் - மூலம்
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   230


    397 அடிதொறும் தலை எழுத்து ஒப்பது, மோனை.

    398 அஃது ஒழித்து ஒன்றின், எதுகை ஆகும்.

    399 ஆயிரு தொடைக்கும் கிளையெழுத்து உரிய

    400 மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே

    401 இறுவாய் ஒன்றல் இயைபின் யாப்பே

    402 அளபு எழின், அவையே அளபெடைத் தொடையே.

    403 'ஒரு சீர் இடையிட்டு எதுகை ஆயின்,
    பொழிப்பு' என மொழிதல் புலவர் ஆறே.

    404 'இரு சீர் இடையிடின், ஒரூஉ' என மொழிப.

    405 சொல்லிய தொடையொடு வேறுபட்டு இயலின்,
    சொல் இயற்புலவர், 'அது செந்தொடை' என்ப.

    406 'மெய் பெறு மரபின் தொடை வகைதாமே
    ஐ ஈர் ஆயிரத்து ஆறு ஐஞ்ஞூற்றொடு
    தொண்டு தலை இட்ட பத்துக் குறை எழுநூற்று
    ஒன்பஃது' என்ப உணர்ந்திசினோரே

    407 தெரிந்தனர் விரிப்பின், வரம்பு இல ஆகும்.

    408 'தொடை வகை நிலையே ஆங்கு' என மொழிப

    409 மாத்திரை முதலா அடிநிலைகாறும்
    நோக்குதல் காரணம் நோக்கு எனப்படுமே

    410 'ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி, என
    நால் இயற்று' என்ப 'பா வகை விரியே'

    411 'அந் நிலை மருங்கின் அறம் முதல் ஆகிய
    மும் முதல் பொருட்கும் உரிய' என்ப

    412 'பா விரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின்,
    ஆசிரியப்பா, வெண்
     

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:36:52(இந்திய நேரம்)