தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-moolam

  • ஓலை எண் : 

  • சொல்லதிகாரம் - மூலம்
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   234


    தரவின் சுருங்கித் தோன்றும்' என்ப

    447 அடக்கு இயல் வாரம் தரவோடு ஒக்கும்

    448 முதல் தொடை பெருகிச் சுருங்குமன் எண்ணே

    449 எண் இடை ஒழிதல் ஏதம் இன்றே
    சின்னம் அல்லாக் காலையான

    450 ஒருபோகு இயற்கையும் இரு வகைத்து ஆகும்

    451 கொச்சக ஒருபோகு, அம்போதரங்கம், என்று
    ஒப்ப நாடி, உணர்தல் வேண்டும்.

    452 'தரவி இன்று ஆகித் தாழிசை பெற்றும்,
    தாழிசை இன்றித் தரவு உடைத்து ஆகியும்,
    எண் இடை இட்டுச் சின்னம் குன்றியும்,
    அடக்கியல் இன்றி அடி நிமிர்ந்து ஒழுகியும்,
    யாப்பினும் பொருளினும் வேற்றுமை உடையது
    கொச்சக ஒருபோகு ஆகும்' என்ப

    453 ஒருபான் சிறுமை; இரட்டி அதன் உயர்பே

    454 அம்போதரங்கம் அறுபதிற்று அடித்தே;
    செம்பால் வாரம் சிறுமைக்கு எல்லை

    455 எருத்தே, கொச்சகம், அராகம், சிற்றெண்,
    அடக்கு இயல் வாரமொடு, அந் நிலைக்கு உரித்தே.

    456 ஒரு பொருள் நுதலிய வெள்ளடி இயலான்,
    திரிபு இன்றி வருவது கலிவெண்பாட்டே.

    457 'தரவும் போக்கும் பாட்டு இடை மிடைந்தும்,
    ஐஞ் சீர் அடுக்கியும், ஆறு மெய் பெற்றும்,
    வெண்பா இயலான் வெளிப்படத் தோன்றும்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:37:14(இந்திய நேரம்)