தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-moolam

  • ஓலை எண் : 

  • சொல்லதிகாரம் - மூலம்
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   244


    மாற்ற அரும் சிறப்பின் மரபு இயல் கிளப்பின்,
    பார்ப்பும், பறழும், குட்டியும், குருளையும்,
    கன்றும், பிள்ளையும், மகவும், மறியும், என்று
    ஒன்பதும், குழவியோடு, இளமைப் பெயரே.

    546 'ஏறும், ஏற்றையும், ஒருத்தலும், களிறும்,
    சேவும், சேவலும், இரலையும், கலையும்,
    மோத்தையும், தகரும், உதளும், அப்பரும்,
    போத்தும், கண்டியும், கடுவனும், பிறவும்,
    யாத்த ஆண்பாற் பெயர்' என மொழிப.

    547 பேடையும், பெடையும், பெட்டையும், பெண்ணும்,
    மூடும், நாகும், கடமையும், அளகும்,
    மந்தியும், பாட்டியும், பிணையும், பிணவும்,
    அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே.

    548 அவற்றுள்,
    பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்று இளமை.

    549 தவழ்பவைதாமும் அவற்று ஓரன்ன

    550 மூங்கா, வெருகு, எலி, மூவரி, அணிலொடு,
    ஆங்கு அவை நான்கும் குட்டிக்கு உரிய.

    551 பறழ் எனப்படினும் உறழ் ஆண்டு இல்லை

    552 'நாயே, பன்றி, புலி, முயல், நான்கும்,
    ஆயும் காலை, குருளை' என்ப.

    553 நரியும் அற்றே, நாடினர் கொளினே.

    554 குட்டியும் பறழும் கூற்று அவண் வரையார்

    555 பிள்ளைப் பெயரும் பிழைப்பு ஆண்டு இல்லை;
    கொள்ளும் காலை, நாய் அலங்கடையே.

    556 யாடும், குதிரையும், நவ்வியும், உழையும்,
    ஓடும் புல்வாய் உளப்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:38:11(இந்திய நேரம்)