தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Agapporul Veenaa

மலைபடுகடாம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   165

திருமழை தலைஇய இருள்நிற விசும்பின்
விண் அதிர் இமிழ் இசை கடுப்பப் பண் அமைத்துத்
திண் வார் விசித்த முழவொடு ஆகுளி
நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்,
மின் இரும் பீலி அணித் தழைக் கோட்டொடு
கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தூம்பின்
இளிப் பயிர் இமிரும் குறும் பரந் தூம்பொடு,
விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ,
நடுவு நின்று இசைக்கும் அரிக் குரல் தட்டை,
கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி,
நொடி தரு பாணிய பதலையும், பிறவும்,
கார் கோள் பலவின் காய்த் துணர் கடுப்ப,
நேர் சீர் சுருக்கிக் காய கலப் பையிர்
கடுக் கலித்து எழுந்த கண் அகன் சிலம்பில்
படுத்து வைத்தன்ன பாறை மருங்கின்,
எடுத்து நிறுத்தன்ன இட்டு அருஞ் சிறு நெறி,
தொடுத்த வாளியர், துணை புணர் கானவர்,
இடுக்கண் செய்யாது, இயங்குநர் இயக்கும்
அடுக்கல் மீமிசை, அருப்பம் பேணாது,
இடிச் சுர நிவப்பின் இயவுக் கொண்டு
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:56:07(இந்திய நேரம்)