Primary tabs

தொடித் திரிவு அன்ன தொண்டு படு திவவின்;
கடிப்பகை அனைத்தும், கேள்வி போகாக்
குரல் ஓர்த்துத் தொடுத்த சுகிர் புரி நரம்பின்,
அரலை தீர உரீஇ, வரகின்
குரல் வார்ந்தன்ன நுண் துளை இரீஇச்
சிலம்பு அமை பத்தல் பசையொடு சேர்த்தி,
இலங்கு துளை செறிய ஆணி முடுக்கிப்
புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்துப்,
புதுவது போர்த்த பொன் போல் பச்சை;
வதுவை நாறும் வண்டு கமழ் ஐம்பால்
மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து
அடங்கு மயிர் ஒழுகிய அவ் வாய் கடுப்ப,
அகடு சேர்பு பொருந்தி, அளவினில் திரியாது,
கவடு படக் கவைஇய சென்று வாங்கு உந்தி;
நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமைக்
களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின்,
வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர்ப் பேரியாழ்
அமை வரப் பண்ணி, அருள் நெறி திரியாது,
இசை பெறு திருவின் வேத்தவை ஏற்பத்
துறை பல முற்றிய பை தீர் பாணரொடு
உயர்ந்து ஓங்கு பெ

