Primary tabs


ஒண் கேழ் வயப் புலி பாய்ந்தெனக் கிளையொடு,
நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல்;
கைக் கோள் மறந்த கரு விரல் மந்தி
அரு விடர் வீழ்ந்த தன் கல்லாப் பார்ப்பிற்கு,
முறி மேய் யாக்கைக் கிளையொடு துவன்றிச்
சிறுமை உற்ற களையாய் பூசல்;
கலை கையற்ற காண்பு இன் நெடு வரை,
நிலைபெய்து இட்ட மால்பு நெறி ஆகப்
பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை;
அருங் குறும்பு எறிந்த கானவர் உவகை,
திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என;
நறவு நாள் செய்த குறுவர் தம் பெண்டிரொடு
மான் தோல் சிறு பறை கறங்கக் கல்லென,
வான் தோய் மீமிசை அயரும் குரவை;
நல் எழில் நெடுந் தேர் இயவு வந்தன்ன,
கல் யாறு ஒலிக்கும்