Primary tabs


நன் பல உடைத்து, அவன் தண் பணை நாடே:
கண்பு மலி பழனம் கமழத் துழைஇ,
வலையோர் தந்த இருஞ் சுவல் வாளை,
நிலையோர் இட்ட நெடு நாண் தூண்டில்,
பிடிக் கை அன்ன, செங் கண் வராஅல்,
துடிக் கண் அன்ன, குறையொடு விரைஇப்
பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர்,
ஞெண்டு ஆடு செறுவில் தராய்க்கண் வைத்த,
விலங்கல் அன்ன, போர் முதல் தொலைஇ,
வளம் செய் வினைஞர் வல்சி நல்கத்
துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதித் தேறல்,
இளங் கதிர் ஞாயிற்றுக் களங்கள்தொறும், பெறுகுவிர்;
முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண் சோறு,
'வண்டு படக் கமழும் தேம் பாய் கண்ணித்
திண் தேர் நன்னற்கும் அயினி சான்ம்' எனக்
கண்டோர் மருளக் கடும்புடன்