Primary tabs


மருதம் பண்ணி, அசையினிர், கழிமின்
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ,
செங் கண் எருமை இனம் பிரி ஒருத்தல்,
கனை செலல் முன்பொடு கதழ்ந்து வரல் போற்றி,
வனை கலத் திகிரியின் குமிழி சுழலும்,
துனை செலல் தலைவாய், ஓ இறந்து வரிக்கும்,
காணுநர் வயாஅம், கட்கு இன் சேயாற்றின்
யாணர் ஒரு கரைக் கொண்டனிர் கழிமின்
நிதியம் துஞ்சும், நிவந்து ஓங்கு வரைப்பின்,
பதிஎழல் அறியாப் பழங் குடி கெழீஇ,
வியல் இடம் பெறாஅ விழுப் பெரு நியமத்து,
யாறு எனக் கிடந்த தெருவின், சாறு என,
இகழுநர் வெரூஉம், கவலை மறுகின்,
கடல் எனக் கார் என, ஒலிக்கும் சும்மையொடு,
மலை என,