Primary tabs


அளைச் செறி உழுவை கோள் உற வெறுத்த
மடக் கண் மரையான் பெருஞ் செவிக் குழவி,
அரக்கு விரித்தன்ன செந் நில மருங்கின்,
பரல் தவழ் உடும்பின் கொடுந் தாள் ஏற்றை,
வரைப் பொலிந்து இயலும் மடக் கண் மஞ்ஞை,
கானக்கோழிக் கவர் குரல் சேவல்,
கானப் பலவின் முழவு மருள் பெரும் பழம்,
இடிக் கலப்பு அன்ன, நறு வடி மாவின்
வடிச் சேறு விளைந்த தீம் பழத் தாரம்,
தூவல் கலித்த இவர் நனை வளர் கொடி,
காஅய்க் கொண்ட நுகம் மருள் நூறை,
பரூஉப் பளிங்கு உதிர்த்த, பல உறு திருமணி,
குரூஉப் புலி பொருத புண் கூர் யானை
முத்துடை மருப்பின் முழு வலி மிகு திரள்,
வளை உடைந்தன்ன வள் இதழ்க் காந்தள்,
நாகம், திலகம், நறுங் காழ்