தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Agapporul Veenaa

மலைபடுகடாம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   192

மிளகின் காய்த் துணர் பசுங் கறி,
திருந்து அமை விளைந்த தேக் கள் தேறல்,
கான் நிலை எருமைக் கழை பெய் தீம் தயிர்,
நீல் நிற ஓரி பாய்ந்தென, நெடு வரை,
நேமியின் செல்லும் நெய்க் கண் இறாஅல்,
உடம்புணர்பு, தழீஇய ஆசினி, அனைத்தும்,
குட மலைப் பிறந்த தண் பெருங் காவிரி
கடல் மண்டு அழுவத்துக் கயவாய் கடுப்ப,
நோனாச் செருவின் நெடுங் கடை துவன்றி
வானத்து அன்ன வளம் மலி யானை,
தாது எருத் ததைந்த, முற்றம் முன்னி,
மழை எதிர் படு கண் முழவு கண் இகுப்பக்
கழை வளர் தூம்பின் கண் இடம் இமிர,
மருதம் பண்ணிய கருங் கோட்டுச் சீறியாழ்
நரம்பு மீது இறவாது, உடன் புணர்ந்து ஒன்றிக்
கடவது அறிந்த இன் குரல் விறலியர்
தொன்று ஒழுகு மரபின் தம் இயல் வழாஅது,
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:58:40(இந்திய நேரம்)