தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Agapporul Veenaa

முல்லைப் பாட்டு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   198

காயா அஞ்சனம் மலர,
முறி இணர்க் கொன்றை நன் பொன் காலக்,
கோடல் குவி முகை அங்கை அவிழத்
தோடு ஆர் தோன்றி குருதி பூப்பக்
கானம் நந்திய செந் நிலப் பெரு வழி,
வானம் வாய்ந்த வாங்கு கதிர் வரகின்,
திரி மருப்பு இரலையொடு மட மான் உகள,
எதிர் செல் வெண் மழை பொழியுந் திங்களின்,
முதிர் காய் வள்ளிஅம் காடு பிறக்கு ஒழியத்
துனை பரி துரக்கும் செலவினர்
வினை விளங்கு நெடுந் தேர் பூண்ட மாவே.
 
 
வண்டு அடைந்த கண்ணி வளர் ஆய்ச்சி வாள் நெடுங் கண்
சென்று அடைந்த நோக்கம் இனிப் பெறுவது - என்றுகொல்
கன்று எடுத்து ஓச்சி, கனி விளவின் காய் உகுத்துக்,
குன்று எடுத்து நின்ற நிலை.
 
 
காவிரிப்   பூம்   பட்டினத்துப்   பொன்   வாணிகனார்  மகனார்
நப்பூதனார்பாடியது
 
முல்லைப் பாட்டு முற்றும்.
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:59:13(இந்திய நேரம்)