தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Agapporul Veenaa

நெடுநல்வாடை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   201

பித்திகத்து,
அவ் இதழ் அவிழ் பதம் கமழப் பொழுது அறிந்து,
இரும்பு செய் விளக்கின் ஈர்ந் திரிக் கொளீஇ,
நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது,
மல்லல் ஆவணம் மாலை அயர
மனை உறை புறவின் செங் கால் சேவல்
இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது,
இரவும் பகலும் மயங்கிக் கையற்று,
மதலைப் பள்ளி மாறுவன இருப்பக்
கடியுடை வியல் நகர் சிறு குறுந் தொழுவர்,
கொள் உறழ் நறுங் கல், பல கூட்டு மறுக;
வடவர் தந்த வான் கேழ் வட்டம்
தென் புல மருங்கில் சாந்தொடு துறப்பக்
கூந்தல், மகளிர் கோதை புனையார்,
பல் இருங் கூந்தல் சில் மலர் பெய்ம்மார்,
தண் நறுந் தகர முளரி நெருப்பு அமைத்து,
இருங் காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்பக்
கை வல் கம்மியன் கவின் பெறப் புனைந்த
செங் கேழ் வட்டம் சுருக்கிக் கொடுந் தறி,
சிலம்பி வால் நூல் வலந்தன தூங்க;
வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின்,
வேனில் பள்ளி தென்வளி தரூஉம்
நேர் வாய்க் கட்டளை, திரியாது, திண் நிலை
போர் வாய்க் கதவம் தாழொடு துறப்பக்
கல்லென் துவலை தூவலின், யாவரும்
தொகு வாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார்,
பகுவாய்த் தடவில்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:59:32(இந்திய நேரம்)