Primary tabs


ஆடல் மகளிர் பாடல் கொளப் புணர்மார்,
தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை,
கொம்மை வருமுலை வெம்மையில் தடைஇக்
கருங் கோட்டுச் சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப;
காதலர்ப் பிரிந்தோர் புலம்ப; பெயல் கனைந்து,
கூதிர் நின்றன்றால் போதே மாதிரம்
விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம்,
இரு கோல் குறிநிலை வழுக்காது, குடக்கு ஏர்பு,
ஒரு திறம் சாரா அரை நாள் அமயத்து,
நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு,
தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கி,
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப, மனை வகுத்து
ஒருங்கு உடன் வளைஇ ஓங்கு நிலை வரைப்பின்,
பரு இரும்பு பிணித்துச் செவ்வரக்கு உரீஇத்
துணை மாண் கதவம் பொருத்தி, இணை மாண்டு,
நாளொடு பெயரிய கோள் அமை விழுமரத்துப்
போது அவிழ் குவளைப் புதுப் பிடி கால் அமைத்துத்