தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Agapporul Veenaa

நெடுநல்வாடை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   203

தாழொடு குயின்ற, போர் அமை புணர்ப்பின்,
கை வல் கம்மியன் முடுக்கலின், புரை தீர்ந்து,
ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை,
வென்று எழு கொடியொடு வேழம் சென்று புகக்
குன்று குயின்றன்ன, ஓங்கு நிலை வாயில்,
திரு நிலை பெற்ற தீது தீர் சிறப்பின்,
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து,
நெடு மயிர் எகினத் தூ நிற ஏற்றை
குறுங்கால் அன்னமொடு உகளும் முன் கடைப்
பணை நிலை முனைஇய பல் உளைப் புரவி
புல் உணாத் தெவிட்டும் புலம்பு விடு குரலொடு,
நிலவுப் பயன் கொள்ளும் நெடு வெண் முற்றத்துக்
கிம்புரிப் பகு வாய் அம்பணம் நிறையக்
கவிழ்ந்து வீழ் அருவிப் பாடு விறந்து, அயல
ஒலி நெடும் பீலி ஒல்க, மெல் இயல்
கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை,
நளி மலைச் சிலம்பில் சிலம்பும் கோயில்
யவனர் இயற்றிய
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:59:43(இந்திய நேரம்)