Primary tabs


கை ஏந்தும் ஐ அகல் நிறைய நெய் சொரிந்து,
பரூஉத் திரி கொளீஇய குரூஉத் தலை நிமிர் எரி,
அறு அறு காலைதோறு, அமைவரப் பண்ணிப்
பல் வேறு பள்ளிதொறும் பாய் இருள் நீங்கப்
பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது,
ஆடவர் குறுகா அருங் கடி வரைப்பின்,
வரை கண்டன்ன தோன்றல, வரை சேர்பு
வில் கிடந்தன்ன கொடிய, பல் வயின்,
வெள்ளி அன்ன விளங்கும் சுதை உரீஇ,
மணி கண்டன்ன மாத் திரள் திண் காழ்ச்
செம்பு இயன்றன்ன செய்வுறு நெடுஞ் சுவர்,
உருவப் பல் பூ ஒரு கொடி வளைஇ,
கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல்
தச நான்கு எய்திய பணை மருள் நோன் தாள்,
இகல் மீக்கூறும், ஏந்து எழில் வரி நுதல்,
பொருது ஒழி, நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து,
சீரும் செம்மையும் ஒப்ப, வல்லோன்
கூர் உளிக் குயின்ற, ஈர் இலை இடை இடுபு,
தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்பப்