Primary tabs


தண் கேணித் தகை முற்றத்துப்
பகட்டு எருத்தின் பல சாலை;
தவப் பள்ளித் தாழ் காவின்
அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும் புகை முனைஇ, குயில் தம்
மா இரும் பெடையோடு இரியல் போகிப்
பூதம் காக்கும் புகல் அருங் கடி நகர்த்
தூது உண் அம் புறவொடு துச்சில் சேக்கும்
முது மரத்த முரண் களரி;
வரி மணல் அகன் திட்டை,
இருங் கிளை, இனன் ஒக்கல்,
கருந் தொழில், கலி மாக்கள்
கடல் இறவின் சூடு தின்றும்,
வயல் ஆமைப் புழுக்கு உண்டும்,
வறள் அடும்பின் மலர் மலைந்தும்
புனல் ஆம்பல் பூச் சூடியும்,
நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரும்
நாள்மீன் விராஅய கோள்மீன் போல
மலர் தலை மன்றத்துப் பலர் உடன் குழீஇக்
கையினும் கலத்தினும் மெய் உறத் தீண்டிப்
பெருஞ் சினத்தால் புறக்கொடாஅது,
இரும் செருவின் இகல் மொய்ம்பினோர்,
கல் எறியும் கவண் வெரீஇப்,
புள் இரியும் புகர்ப் போந்தைப்
பறழ்ப் பன்றிப்