தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Agapporul Veenaa

பட்டினப் பாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   214

பல் கோழி,
உறைக் கிணற்றுப் புறச் சேரி,
மேழகத் தகரொடு சிவல் விளையாடக்
கிடுகு நிரைத்து, எஃகு ஊன்றி,
நடு கல்லின் அரண் போல,
நெடுந் தூண்டிலில் காழ் சேர்த்திய
குறுங் கூரைக் குடி நாப்பண்;
நிலவு அடைந்த இருள் போல,
வலை உணங்கும் மணல் முன்றில்;
வீழ்த் தாழைத் தாள் தாழ்ந்த
வெண் கூதாளத்துத் தண்பூங் கோதையர்,
சினைச் சுறவின் கோடு நட்டு,
மனைச் சேர்த்திய வல் அணங்கினான்,
மடல் தாழை மலர் மலைந்தும்;
பிணர்ப் பெண்ணைப் பிழி மாந்தியும்,
புன் தலை இரும் பரதவர்
பைந் தழை மா மகளிரொடு,
பாய் இரும் பனிக் கடல் வேட்டம் செல்லாது,
உவவு மடிந்து, உண்டு ஆடியும்;
புலவு மணல், பூங் கானல்,
மா மலை அணைந்த கொண்மூப் போலவும்,
தாய் முலை தழுவிய குழவி போலவும்,
தேறு நீர்ப் புணரியோடு யாறு தலைமணக்கும்
மலி ஓதத்து ஒலி கூடல்,
தீது நீங்கக் கடல் ஆடியும்;
மாசு போகப் புனல் படிந்தும்;
அலவன் ஆட்டியும்;
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 14:00:45(இந்திய நேரம்)