Primary tabs


வண்டல் ஆயமொடு உண்துறைத் தலைஇப்
புனல் ஆடு மகளிர் இட்ட பொலங் குழை
இரை தேர் மணிச் சிரல் இரை செத்து எறிந்தெனப்,
புள் ஆர் பெண்ணைப் புலம்பு மடல் செல்லாது,
கேள்வி அந்தணர் அருங் கடன் இறுத்த
வேள்வித் தூணத்து அசைஇ, யவனர்
ஓதிம விளக்கின், உயர்மிசைக் கொண்ட,
வைகுறு மீனின், பைபயத் தோன்றும்
நீர்ப்பெயற்று எல்லைப் போகிப் பால்கேழ்
வால் உளைப் புரவியொடு வட வளம் தரூஉம்
நாவாய் சூழ்ந்த நளி நீர்ப் படப்பை,
மாடம் ஓங்கிய மணல் மலி மறுகின்,
பரதர் மலிந்த பல் வேறு தெருவின்,
சிலதர் காக்கும் சேண் உயர் வரைப்பின்,
நெல் உழு பகட்டொடு கறவை துன்னா,
ஏழகத் தகரோடு எகினம் கொட்கும்
கூழ் உடை நல் இல் கொடும் பூண் மகளிர்,
கொன்றை மென் சினைப் பனி தவழ்பவை போல்,
பைங் காழ் அல்குல் நுண் துகில்