தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Agapporul Veenaa

பெரும்பாண் ஆற்றுப்படை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   240

அறி மரபின் கைதொழூஉப் பழிச்சி,
நின் நிலை தெரியா அளவை அந் நிலை
நாவல் அம் தண் பொழில் வீவு இன்று விளங்க,
நில்லா உலகத்து நிலைமை தூக்கி,
அந் நிலை அணுகல் வேண்டி, நின் அரைப்
பாசி அன்ன சிதர்வை நீக்கி,
ஆவி அன்ன அவிர் நூல் கலிங்கம்
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇக்
கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை
வல்லோன் அட்ட பல் ஊன் கொழுங் குறை,
அரி செத்து உணங்கிய பெருஞ் செந்நெல்லின்
தெரி கொள் அரிசித் திரள் நெடும் புழுக்கல்,
அருங் கடித் தீம் சுவை அமுதொடு, பிறவும்,
விருப்புடை மரபின் கரப்புடை அடிசில்,
மீன் பூத்தன்ன வான் கலம் பரப்பி,
மகமுறை, மகமுறை நோக்கி, முகன் அமர்ந்து,
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி,
மங்குல் வானத்துத் திங்கள் ஏய்க்கும்
ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை
நீடு இரும் பித்தை பொலியச் சூட்டி;
உரவுக் கடல் முகந்த பருவ வானத்துப்
பகற் பெயல் துளியின் மின்னு நிமிர்ந்தாங்குப்
புனை இருங் கதுப்பகம்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 14:03:13(இந்திய நேரம்)