Primary tabs


வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்துக்
கானக் குமிழின் கனி நிறம் கடுப்பப்
புகழ் வினைப் பொலிந்த பச்சையொடு; தேம் பெய்து,
அமிழ்து பொதிந்து இலிற்றும், அடங்கு புரி நரம்பின்;
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்விக்
கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக,
நூல் நெறி மரபின், பண்ணி, 'ஆனாது,
முதுவோர்க்கு முகிழ்த்த கையினை' எனவும்,
'இளையோர்க்கு மலர்ந்த மார்பினை' எனவும்
'ஏரோர்க்கு நிழன்ற கோலினை' எனவும்
'தேரோர்க்கு அழன்ற வேலினை' எனவும்
நீ சில மொழியா அளவை மாசு இல்,
காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇப்
பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கிக்
கா எரியூட்டிய கவர் கணைத் தூணிப்
பூ விரி கச்சைப் புகழோன் தன்முன்,
பனிவரை மார்பன், பயந்த நுண் பொருள்
பனுவலின் வழாஅப் பல் வேறு அடிசில்,
வாள் நிற விசும்பின் கோண்மீன் சூழ்ந்த
இளங் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
விளங்கு பொன்கலத்தில் விரும்புவன பேணி,
ஆனா விருப்பின், தான் நின்று ஊட்டித்
திறல் சால்