Primary tabs


விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி,
நயவர், பாணர், புன்கண் தீர்த்தபின்,
வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு;
பருவ வானத்துப் பாற்கதிர் பரப்பி
உருவ வான் மதி ஊர்கொண்டாங்குக்
கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு
ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு,
சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடுஞ் சினைத்
ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல,
உள் அரக்கு எறிந்த உருக்குறு போர்வைக்
கருந் தொழில் வினைஞர் கைவினை முற்றி,
ஊர்ந்து பெயர் பெற்ற எழில் நடைப் பாகரொடு;
மா செலவு ஒழிக்கும் மதனுடை நோன் தாள்
வாள் முகப் பாண்டில் வலவனொடு; தரீஇ,
அன்றே விடுக்கும், அவன் பரிசில் மென் தோள்,
துகில் அணி அல்குல், துளங்கு இயல் மகளிர்
அகில் உண விரித்த அம் மென் கூந்தலின்,
மணி மயில் கலாபம் மஞ்சு இடைப் பரப்பித்
துணி மழை தவழும் துயல் கழை நெடுங் கோட்டு,
எறிந்து உரும் இறந்த ஏற்று அருஞ் சென்னிக்
குறிஞ்சிக் கோமான், கொய் தளிர்க் கண்ணிச்
செல் இசை