தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

I_raiyanaar Agapporul

  • ஓலை எண் : 

  • இலக்கணக் கொத்து
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   9

    ஐ - கு ஒன்றே, அல்லன பலவே.
     
    உருபும் பொருளும்
     
    23.
    ஓருரு பிற்கே பலபொருள் வருதலும்
    ஒருபொருட் கேபல உருபுகள் வருதலும்
    எனஇரண் டாகும் வேற்றுமை இயல்பே,
    அவ்விரண் டனையும் முறையே அறைகுவன்.
     
     உருபுகள் தோன்றுமிடம்
     
    24.
    பகுபதம் பகாப்பதம் இருவகைத் தொடர்ப்பதம்
    வினைமுற் றுப்பெயர் குறிப்புமுற் றுப்பெயர்
    தொழிற்பெயர் ஆதியின் தோன்றும்எட்டு உருபே.
     
     எழுவாய் வேற்றுமை உருபு பற்றிய

    பல கருத்துகள்
     

    25.
    எழுவாய் வேற்றுமைக்கு உருபே இன்று;
    பெயரே, பயனிலை கொள்ளும் தன்மையே,
    பயனிலை தன்னைக் கொண்ட தன்மையே,
    வினைமுதல் ஆதலே, விகாரப் பெயரே,
    பெயர்ப்பின் விகுதி பெறுதலே, ஆயவன்
    ஆனவன் ஆவான் ஆகின் றவன்முதல்
    ஐம்பால் சொல்லும் பெயர்ப்பின் அடைதலே
    உருபு என வெவ்வேறு உரைத்தார் பலரே.
     
     வினைமுதல் தோன்றும் இடம்
     
    26.
    இருவகைச் செயப்படு பொருளே ஏது
    தன்வசம் தெரியா நிலைதடு மாற்றம்
    தொழிற்பெயர் ஏழில் தோன்றும் வினைமுதல்;
    கருவி இடம்கொள் வானினும் கருதுவர்.
     
     இருவினைமுதல் வினை
     
    27.
    இருவினை முதலால் ஒருவினையும் உள
     
    மூவகை வினைமுதல்கள்
     
    28.
    ஏவுதல் இயற்றுதல் இவையின்வேறு ஆதல்
    எனவினை முதல்மூ வகையாம் என்ப.
      
    வினைமுதற்குப் புறநடை
     
    29.
    வினைமுதல் இன்னும் விரிக்கின் பெருகும்.
     
     விளி வேற்றுமை
     
    30.
    அழைத்தல் என்றுஒன்று அன்றிவேறு இன்மையின்
    விளிக்குச் சூத்திரம் விளம்பிலம் என்க.
     செயப்படுபொருள் விரி
     
    31.
    கருத்துண் டாதல், கருத்தின் றாதல்,
    இருமையும் ஆதல், ஈருருபு இணைதல்,
    கருத்தா ஆதல், அசுநிலை ஆதல்,
    தெரிநிலை ஆதியாய் வரும்செயப் படுபொருள்;
    இயற்றப்படுதல், எய்தப்படுதல்,
    வேறு படுக்கப் படுதல் ஆதியும்,
    அவ்வெழு வகையுள் அடங்கும் என்ப.
      
    செயப்படுபொருளுக்குப் புறனடை
     
    32.
    செயப்படுப் பொருள்இனும் செப்பின் பெருகும்.
     
    கருவியின் வகைகள்
     
    33.
    அகம்புறம் ஒற்றுமை ஆகும் கருவி.
     
    மூன்றனுள் கருதப்படுவன
     
    34.
    முதல்துணை ஞாபகம் காரகம் ஏது
    வினையே நிமித்தம் வேற்றுமை வினைமுதல்
    காலம் ஆ திகளைஇம் மூன்றனுள் கருதுவர்.
     

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 14:06:36(இந்திய நேரம்)