தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

I_raiyanaar Agapporul

  • ஓலை எண் : 

  • இலக்கணக் கொத்து
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   16

    கருதிய பொருள்அறி கருவி யாக
    வருமே உருபு முதலிய விரியே.
     
    தொகையில் பொருள்
     
    93.
    தொகில் ஒரு பொருள்முதல் எழுபொருள் வரைதரும்.
     
    தடுமாறு தொழில் தொகை
     
    94.
    தடுமா றுந்தொழில் தரும்தொகை சிலவே.
     
    தொகைநிலை, தொகாநிலை
    பொதுக்கருத்து
     
    95.
    தொகைநிலை தொகாநிலை எனும்சொற் பொருளான்
    மாறுபடு புலவர்கள் மூவர்கள் என்க.
    தொகைநிலை, தொகாநிலை
    மூவகை விளக்கம்
     
    96.
    தொகைநிலைக் குணத்தைச் சொல்லுங் காலை
    வேற்றுமை உருபு முதலிய இடைநிலை
    தொகுதலின் தொகைநிலை எனப்படும் என்றும்,
    நிலைமொழி வருமொழி நீக்கம் இன்றி
    ஈறும் முதலும் இசைந்து நின்று,
    விட்டிசைப்பு இன்றிஓர் நிலைமொழி விதிபெறத்
    தொகுதலின் தொகைநிலை எனப்படும் என்றும்
    பலசொல் கூடிஓர் சொல்லே யாகிப்
    பிளவுபட்டு இசைக்கவும் பிரிக்கவும் படாமல்
    ஈறும் முதலும் இவைஎனப் படாமல்
    தொகுதலின் தொகைநிலை எனப்படும் என்றும்,
    கூறுவர், தொகைநிலை கூறுங் காலை
    உருபு முதலிய இடையே உரைத்தல்;
    விட்டிசைத்து உரைத்தல், வெவ்வேறு உரைத்தல்;
    என்றே கூறுவர்; இவர்மதம் மறுபடா.
     
    தொகையும் தொகுக்கப்படும் நிலை
     
    97.
    அறுவகைத் தொகையும் அறையுங் காலை,
    ஒன்றே தொகுதலும் பலவே தொகுதலும்,
    ஆறு வகையும் அடங்கத் தொகுதலும்,
    உருபே தொகுதலும் பொருளே தொகுதலும்,
    உருபும் பொருளும் ஒருங்கே தொகுதலும்
    உருபும் பொருளும் ஒருங்குபல தொகுதலும்,
    பொருளும் உருபும் பொருளும் தொகுதலும்
    முதல்இடை கடைஎன மூன்றினுந் தொகுதலும்,
    கடைஇடை இரண்டினும் காணத் தொகுதலும்
    ஆதியாப் பலவும் அறைந்தனர் புலவர்.
     
    பண்புத்தொகை
     
    98.
    பண்புத் தொகைவிதி பகரின் பெருகும்;
    ஆயினும், சிலவிதி அறைகுவன் கேள்நீ!
    பண்புமுன் வருதலும், இருபண்பு அடுத்தலும்,
    இருபண்பொடு பொருள் இயைதலும் அவ்விரு,
    பண்புகள் தாமே பொருளை விளைத்தலும்,
    இயற்பெயர் சிறப்புப் பெயர்மா றுதலும்,
    சிறப்புப் பொதுப்பெயர் முறையே சிறத்தலும்,
    பொதுச்சிறப் புப்பெயர் முறையே பொருந்தலும்,
     

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 14:07:16(இந்திய நேரம்)