இருவகை யெச்சம் எனப்பெயர் பெற்றும்
பகாப்பதப் பொருள்படப் பகுபதம் ஆகியும்,
பகாப்பதச் சொல்படப் பகுபதம் ஆகியும்
பகுத்தலை ஏற்றும் பகாமையை ஏற்றும்,
இவ்விரு குணத்தையும் ஒருங்கே ஏற்றும்,
பலசொல் ஒருபொரு ளாகப் பட்டும்,
பலபொருள் ஒருசொல் ஆகப் பட்டும்
இன்னும் பலவாய் இயலும் என்ப.
118.
வேற்றுமை வழியோடு அல்வழி அன்றியும்,
அவ்விரு வழியும் அடங்கும் பொதுவழி
அம்மூன் றுள்ளே அடங்கா வழியும்
எனநான்கு என்றே இயம்புவர் சந்தி.
119.
வேற்றுமை வழிஈ ரெட்டாய் விரியும்,
வெட்டு என்று மொழியவும் பெறுமே
ஏனைமூ விரியும் இயம்பில் பெருகும்.
120.
பெயர்முற்று எச்சமொடு உருபுஐந்து அடுக்கே;
இரட்டைக் கிளவியோடு இருமூன்று; அவைதாம்,
ஒன்றுபல அடுக்கல், வேறுபல அடுக்கல்,
விதியாய் அடுக்கல், மறையாய் அடுக்கல்,
விதிமறை கூடி விரவி அடுக்கல்,
பலசொல் கூடிஓர் பொருளாய் அடுக்கல்,
பலபொருட் கேஒரு சொல்லாய் அடுக்கல்,
இருவகை தமக்கும் பொதுவாய் அடுக்கல்,
இயல்பாய் அடுக்கல், விகாரமாய் அடுக்கல்,
ஆதியாப் பலவும் அறைகுவர் புலவர்.
121.
அடுக்குஅல் லவையும் அடுக்குஅவை போல்வரும்
அவ்வடுக்கு அணியினுள் அளவிலை என்ப.
122.
பொருளைப் பொருளெனல், பொருள்அல் லதனையே
பொருளெனல், இதுபொருள் அன்றுஎன்றுஅறிந்தும்
இதுவே பொருள்எனல் எனமூன்று துணிவே.
123.
அன்புஅருள் ஆசையோடு அறிவுஅறி யாமைஇவ்
ஐந்தால் துணிதல்அம் மூன்றனுள் அடங்கும்.
124.
ஒருதொடர் பலதொடர் எனத்தொடர் இரண்டே.
எழுத்துச் சொற்பொருட்டிரிபு
125.
எழுத்துச் சொல்திரிபு இரண்டே அன்றிப்
பொருள்திரிபு எங்கும் பொருந்தும் என்ப.
126.
பலபொருட்கு ஒருவடிவு ஆகும் பதங்களை
ஓசையொடு கூறுவர் உயர்ந்தோர்; அவைதாம்,