தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

I_raiyanaar Agapporul

  • ஓலை எண் : 

  • இலக்கணக் கொத்து
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   18

    பொருத்தம்இல் புணர்ச்சி எனப்புகன் றனரே.
     
    இருவகையும் ஒருங்கியல் புணர்ச்சி
     
    109.
    இவ்விரு வகையும் ஒருங்கியல் புணர்ச்சி
    சிலஇடைப் பிறவரல் எனத்தெளிந் தனரே.
     
    வழுவுடைப் புணர்ச்சி
     
    110.
    வழுவுடைப் புணர்ச்சியைப் பலர்விரித் தலின்இலம்.
     
    எழுத்து விகாரவகை
     
    111.
    புணர்ச்சி விகாரம் புணர்ச்சிஇல் விகாரம்
    எனஇரண்டு ஆகும் எழுத்து விகாரம்
     
    புணர்ச்சி விகாரவகை
     
    112.
    எழுத்திலக் கணத்தின் எழுந்த விகாரம்
    யாப்பிலக் கணத்தின் எழுந்த விகாரம்
    எனஇரு கூறாம் புணர்ச்சி விகாரம்.
     
    புணர்ச்சியில் விகாரம்
     
    113.
    தோன்றல் திரிதல் கெடுதல்நிலை மாறுதல்
    எனநான்கு ஆகும் புணர்ச்சியில் விகாரம்.
     
    சொல் விகாரம்
     
    114.
    இந்நான்கு இயல்பும் இயம்புவர் மொழிக்கும்.
     
    விகாரமும் பொருளும்
     
    115.
    விகாரத் தால்பொருள் வேறு படுதலும்
    விகாரத் தால்பொருள் வேறு படாமையும்
    உளஎன மொழிப உணர்ந்திசி னோரே.
     
    ஒருசாரார் கருத்து
     
    116.
    காரணம் அதனையே இடுகுறி யாகவும்,
    இடுகுறி அதனையே காரண மாகவும்,
    பலசொல் லினையே ஒருசொல் லாகவும்,
    ஒருசொல் லினையே பலசொல் லாகவும்,
    கருதுவர் ஒரோவழிக் கற்றறிந் தோரே.
     
    பகுபத வகைகள்
     
    117.
    பகுபதத்து இலக்கணம் பகருங் காலை,
    பகாப்பதம் தொடர்மொழி இரண்டினுள் படாமல்
    ஒருமொழி ஈற்றினும், தொடர்மொழி ஈற்றினும்
    பின்மொழி கெட்ட முன்மொழி ஈற்றினும்,
    அளவிலை யாகி வரும்விகு திகளில்
    பொருந்தும் விகுதிகள் பொருந்தல் அன்றியும்,
    வேற்றுமை உவம உருபுகள் இடைநிலை,
    சாரியை நான்கும் தனித்தும் பொருந்தியும்,
    வேற்றுமைப் பொருள்களை ஏற்று நின்றும்,
    ஒவ்வொரு வேற்றுமை வெவ்வேறு ஆகியும்,
    இதனைஉடையது இதுஎன நின்றும்,
    இதனது உடைமை இதுஎன நின்றும்,
    இடப்பொருள் உணர்த்தும் வினாச்சுட்டு எண்பெற
    இடைச்சொல் ஆகியே எழுந்து நின்றும்,
    தன்மை மாத்திரம் தானாய் நின்றும்,
    பெயர்ச்சொல் முதலா நான்கினும் பிறந்தும்
    பெயர்தான் அறுவகை யாகப் பிரிந்தும்
    பகுபதம் ஆயினும் பலகுணப் படலால்
    பகாப்பதம் என்னப் பெயர்படல் அன்றியும்,
    வினைக்குறிப்பு முற்று வினைக்குறிப் புப்பெயர்
      

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 14:07:29(இந்திய நேரம்)