Primary tabs

'வருகமாள, என் உயிர்!' எனப் பெரிது உவந்து,
கொண்டனள் நின்றோட் கண்டு, நிலைச் செல்லேன்,
'மாசு இல் குறுமகள்! எவன் பேதுற்றனை?
நீயும் தாயை இவற்கு?' என, யான் தற்
கரைய, வந்து விரைவனென் கவைஇ -
களவு உடம்படுநரின் கவிழ்ந்து, நிலம் கிளையா,
நாணி நின்றோள் நிலை கண்டு, யானும்
பேணினன் அல்லெனோ - மகிழ்ந! - வானத்து
அணங்கு அருங் கடவுள் அன்னோள் நின்
மகன் தாய் ஆதல் புரைவது - ஆங்கு எனவே?
என்பது பரத்தையர்
சேரியினின்றும் வந்த தலைமகன், 'யாரையும்
அறியேன்' என்றாற்குத் தலைமகள் சொல்லியது. - சாகலாசனார்.

