Primary tabs

![]()
கடவுள் வாழ்த்து.
பாரதம்பாடிய பெருந்தேவனார் பாடியது.
இதன் பொருள் - திருமுடிமேற் சூடப்படுங் கண்ணி கார்காலத்து
மலரும் நறிய கொன்றைப்பூ; அழகிய நிறத்தையுடைய திருமார்பின்
மாலையும் அக் கொன்றைப்பூ; ஏறப்படுவது தூய வெளிய ஆனேறு;
மிக்க பெருமை பொருந்திய கொடியும் அவ்வானேறென்று சொல்லுவர்;
நஞ்சினது கறுப்பு, திருமிடற்றை அழகு செய்தலும் செய்தது;
அக்கறுப்பு, தான் மறுவாயும் வானோரை உய்யக்கொண்டமையின்,
வேதத்தைப் பயிலும் அந்தணராற் புகழவும்படும்; பெண் வடிவு
ஒருபக்கமாயிற்று; ஆய அவ்வடிவுதான், தன்னுள்ளே ஒடுக்கி
மறைக்கினும் மறைக்கப்படும்; பிறை, திருநுதற்கு அழகாயது.
அப்பிறைதான் பெரியோன் சூடுதலால், பதினெண் கணங்களாலும்
புகழவும்படும்; எவ்வகைப்பட்ட உயிர்களுக்கும் காவலாகிய, நீர்
தொலைவறியாக் குண்டிகையானும் தாழ்ந்த திருச்சடையானும் சிறந்த
செய்தற்கரிய தவத்தையுடையோனுக்கு - என்றவாறு.
தன்னுளடக்கிக் கரக்கினும் கரக்குமென்பதற்கு அவ்வடிவுதான்
எல்லாப் பொருளையும் தன்னுள்ளேயடக்கி அவ்விறைவன்

