Primary tabs


யாக்கை பொறுத்த நிலம். புகழ்
இல்லாத உடம்பைச் சுமந்த நிலம்,
பழிப்பு
இல்லாத வளப்பத்தை உடைய விளையுள் குன்றும். உயிர்
உண்டாயினும் அதனால் பயன் கொள்ளாமையின் யாக்கை எனவும்
அது நிலத்திற்குப் பொறையாகலின் ''பொறுத்த'' எனவும் கூறினார்.
விளையுள் குன்றுதற்கேது, பாவ யாக்கையைப் பொறுக்கின்ற வெறுப்பு.
''குன்றும்'' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல்
நின்றது. இவை நான்கு பாட்டானும் புகழ் இல்லாதாரது தாழ்வு
கூறப்பட்டது.வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய வாழ்வாரே
வாழா தவர். தம்மாட்டு வசை உண்டாகாமல் வாழ்வாரே
உயிர்
வாழ்வாராவார், புகழ் உண்டாகாமல் வாழ்வாரே
இறந்தார் ஆவார்.
வசையொழிதலாவது இசை என்னும் எச்சம் பெறுதல் ஆயினமையின்,
இசையொழிதலாவது வசை பெறுதலாயிற்று. மேல், ''இசை இலா
யாக்கை'' என்றதனை விளக்கியவாறு. இதனான் இவ்விரண்டும் உடன்
கூறப்பட்டன. மறுமைப்பயன் ''வானுறையும் தெய்வத்துள்
வைக்கப்படும்'' குறள்50 என மேலே கூறப்பட்டது. படவே
இல்லறத்திற்கு இவ்வுலகில் புகழும், தேவர் உலகில் போகமும் பயன்
என்பது பெற்றாம். இனி, மனு முதலிய அற நூல்களால் பொதுவாகக்
கூறப்பட்ட இல்லறங்கள் எல்லாம் இவர் தொகுத்துக் கூறிய
இவற்றுள்ளே அடங்கும்: அஃது அறிந்து அடக்கிக் கொள்க: யாம்
உரைப்பின் பெருகும்.
இனி முறையானே துறவறம்
கூறிய
தொடங்கினார்.துறவறமாவது, மேற்கூறிய
இல்லறத்தின் வழுவாது ஒழுகி
அறிவுடையவராய்ப்
பிறப்பினை அஞ்சி, வீடுபேற்றின்
பொருட்டுத்
துறந்தார்

