தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukkural

திருக்குறள்
ஓலை எண் :   83


க்கு  உரித்தாய  அறம்.  அதுதான்   வினை  மாசு  தீர்ந்து  அந்தக்
கரணங்கள் தூய ஆதற்பொருட்டு அவராற் காக்கப்படும் விரதங்களும்,
அவற்றான்   அவை  தூய  ஆயவழி  உதிப்பதாய  ஞானமும்  என
இருவகைப்படும்.    அவற்றுள்    விரதங்களாவன:   ''இன்ன  அறம்
செய்வல்''   எனவும்,   ''இன்ன   பாவம்   ஒழிவல்''  எனவும்,  தம்
ஆற்றலுக்கு  ஏற்ப வரைந்து கொள்வன. அவைதாம் வரம்பிலவாகலின்
பெருகுமென்று அஞ்சி,அவை தம்முள்ளே பலவற்றையும் அகப்படுத்து
நிற்கும்  சிறப்புடையன  சிலவற்றை  ஈண்டுக்  கூறுவான்  தொடங்கி,
முதற்கண்   அருள்  உடைமை  கூறுகின்றார்.  அஃதாவது, தொடர்பு
பற்றாது  இயல்பாக  எல்லா  உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை.
இல்லறத்திற்கு     அன்புடைமைபோல     இது     துறவறத்திற்குச்
சிறந்தமையின்   முன்   கூறப்பட்டது.  அருட்செல்வம்  செல்வத்துள்
செல்வம்  பொருட்செல்வம்  பூரியார்  கண்ணும்  உள.  செல்வங்கள்
பலவற்றுள்ளும் ஆராய்ந்தெடுக்கப்பட்ட செல்வமாவது அருளான்வரும்
செல்வம்,    அஃது    ஒழிந்த    பொருளான்    வரும்செல்வங்கள்
இழிந்தார்கண்ணும்    உளவாம்    ஆகலான்.    அருளான்   வரும்
செல்வமாவது,   உயிர்களை   ஓம்பி   அவ்வறத்தான்   மேம்படுதல்.
உயர்ந்தார்கண்ணே  அல்லது  இல்லாத அருட்செல்வமே சிறப்புடைய
செல்வம்,  ஏனை நீசர்கண்ணும் உளவாம்பொருட் செல்வங்கள் சிறப்பு
இல என்பதாம். நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான தேரினும்
அஃதே  துணை.  அளவைகளானும்  பொருந்து மாற்றானும் நன்றான
நெறியிலே   நின்று,   நமக்குத்  துணையாம்  அறம்  யாது?  என்று
ஆராய்ந்து, அருளுடையராக, ஒன்றையொன்று ஒவ்வாத சமய நெறிகள்
எல்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)