Primary tabs


லாவற்றானும் ஆராய்ந்தாலும்
துணையாவது அவ்வருளே, பிறிது
இல்லை. அளவைகளாவன: பொறிகளான் காணும்
காட்சியும்,
குறிகளான் உய்த்துணரும் அனுமானமும், கருத்தா மொழி ஆகிய
ஆகமமும் என மூன்று. ஒப்புப்பற்றி உணரும் உவமையும், இங்ஙனம்
அன்றாயின் இது கூடாது என்று உணரும் அருத்தாபத்தியும்,
உண்மைக்கு மாறாயஇன்மையும் என இவற்றைக் கூட்டி, ஆறு
என்பாரும் உளர். இவையும் ஒரு ஆற்றான் அவற்றுள்ளே
அடங்குதலின் மூன்று என்றலே கருத்து. பொருந்தும் ஆறாவது, ''இது
கூடும் , இது கூடாது'' எனத் தன் கண்ணே தோன்றுவது. இதனை
வடநூலார் ''உத்தி'' என்ப. ''ஆற்றான்'' என்பது
வேற்றுமை மயக்கம்.
ஒன்றை ஒன்று ஒவ்வாமையாவது மத வேறுபாட்டான் அளவைகளும்
பொருள்களும் தம்முள் மாறுகோடல்; அன்னவாயினும், அருள் துணை
என்றற்கண் ஒக்கும் என்பதாம். உயிரை விட்டு நீங்காது இருமையினும்
உதவலின், ''துணை'' என்றார். இவை இரண்டு பாட்டானும் அருளினது
சிறப்புக் கூறப்பட்டது. அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை
இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல். இருள் செறிந்த துன்ப
உலகத்துள் சென்று புகுதல், அருள் செறிந்த நெஞ்சினை
உடையார்க்கு இல்லை. ''இருள் செறிந்த துன்ப உலகம்'' என்றது,
திணிந்த இருளை உடைத்தாய்த் தன் கண்ணே புக்கார்க்குத் துன்பம்
செய்வதோர் நரகத்தை, அது கீழுலகத்துள் ஓர் இடம் ஆகலின்,
''உலகம்'' எனப்பட்டது. மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற் கில்லென்ப
தன்உயிர் அஞ்சும் வினை. நிலைபேறுடைய உயிர்களைப் பேணி
அவற்றின்கண் அருளுடையன் ஆவானுக்கு, தன் உயிர் அஞ்சுதற்கு
ஏதுவாகிய தீவினைகள் உளவாகா என்று சொல்லுவர் அறிந்தோர்.
உயிர்கள் எல்லாம் நித்தம் ஆக

