Primary tabs


மையின், ''அவம் ஆம்'' என்றும்
கூறினார். துறந்தார்க்குத் துப்புரவு
வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம். இல்லறத்தையே பற்றி
நிற்பார், துறந்தார்க்கு உண்டியும் மருந்தும் உறையுளும் உதவலை
விரும்பித் தாம் தவம் செய்தலை மறந்தார் போலும். துப்புரவு -
அனுபவிக்கப்படுவன. ''வேண்டியாங்கு எய்தற்'' பயத்தது ஆகலின்
குறள்265 யாவராலும் செய்யப்படுவதாய தவத்தைத் தாம் செய்யும்
தானத்தின்மேல் விருப்பம் மிகுதியால் மறந்தார் போலும். எனவே,
தானத்தினும் தவம் மிக்கது என்பது பெற்றாம். ஒன்னார்த் தெறலும்
உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும். அறத்திற்குப்
பகையாய் அழிவு செய்தாரைக் கெடுத்தலும், அதனை உவந்தாரை
உயர்த்தலும் ஆகிய இவ்விரண்டையும் எண்ணின் தவத்தான் வரும் -
தவம் செய்வார் நினைப்பராயின், அவர் தவ வலியான் அவை
அவர்க்கு உளவாம். முற்றத் துறந்தார்க்கு ஒன்னாரும் உவந்தாரும்
உண்மை கூடாமையின், தவத்திற்கு ஏற்றி உரைக்கப்பட்டது.
''எண்ணின்'' என்றதனால், அவர்க்கு அவை எண்ணாமை இயல்பு
என்பது பெற்றாம். ஒன்னார் பெரியராயினும், உவந்தார் சிறியராயினும்,
கேடும் ஆக்கமும் நினைந்த துணையானே வந்து நிற்கும் எனத் தவம்
செய்வார் மேலிட்டுத் தவத்தினது ஆற்றல் கூறியவாறு. வேண்டிய
வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும். முயன்றால்
மறுமைக்கண் தாம் வேண்டிய பயன்கள் வேண்டியவாறே பெறலாம்
ஆதலால்; செய்யப்படுவதாய தவம் இம்மைக்கண் அறிவுடையோரான்
முயலப்படும். ''ஈண்டு'' என்பதனான் ''மறுமைக்கண்'' என்பது
பெற்றாம். மேற்கதி, வீடு பேறுகள் தவத்தான

