தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukkural

திருக்குறள்
ஓலை எண் :   92


ன்றி  எய்தப்படா  என்பதாம்.  இவை  நான்கு பாட்டானும் தவத்தது
சிறப்புக்   கூறப்பட்டது.   தவஞ்செய்வார்  தம்கருமஞ்  செய்வார்மற்
றல்லார் அவஞ்செய்வார் ஆசையுள் பட்டு. தம் கருமம் செய்வாராவார்
துறந்து   தவத்தைச்   செய்வார்,  ஒழிந்த  பொருள்  இன்பங்களைச்
செய்வார்,  அவற்றின்கண்  ஆசையாகிய  வலையுள்பட்டுத்  தமக்குக்
கேடு   செய்வார்.  அநித்தமாய்  மூவகைத்  துன்பத்ததாய்  உயிரின்
வேறாய  உடற்கு  வருத்தம்  வரும்  என்று  ஒழியாது  தவத்தினைச்
செய்ய,  பிறப்புப்  பிணிமூப்பு  இறப்புக்களான் அநாதியாகத் துன்பம்
எய்தி  வருகின்ற உயிர் ஞானம் பிறந்து வீடு பெறும் ஆகலின், தவம்
செய்வாரைத் ''தம் கருமம் செய்வார்'' என்றும், கணத்துள் அழிவதான
சிற்றின்பத்தின் பொருட்டுப் பலபிறவியும் துன்புறத்தக்க பாவஞ்செய்து
கோடலின்,   அல்லாதாரை  ''அவம்  செய்வார்''  என்றும்  கூறினார்.
''மற்று''   வினைமாற்றின்கண்   வந்தது.   சுடச்சுடரும்  பொன்போல்
ஒளிவிடும்  துன்பம்  சுடக்சுட  நோற்கிற்  பவர்க்கு. தீயின்கண் ஓடும்
பொன்னுக்கு  அது  சுடச்சுடத்  தன்னோடு கலந்த குற்றம் நீங்கி ஒளி
மிகுமாறு  போல,  நோற்கிற்பவர்க்குத்  துன்பம் சுடச்சுட ஒளி விடும்.
தவம் செய்ய வல்லார்க்கு அதனான் வரும் துன்பம் வருத்த வருத்தத்
தம்மொடு  கலந்த  பாவம் நீங்கி ஞானம் மிகும். ''சுடச்சுடரும் பொன்
போல்''    என்றார்    ஆயினும்,    கருத்து   நோக்கி   இவ்வாறு
உரைக்கப்பட்டது.  ஒளி  போலப்  பொருள்களை விளக்கலின். ''ஒளி''
என்றார்.   தன்உயிர்  தான் அறப்  பெற்றானை  ஏனைய  மன்னுயிர்
எல்லாம்   தொழும்.   தன்   உயிரைத்  தான்  தனக்கு  உரித்தாகப்
பெற்றவனை,   பெறாதனவாகிய  மன்  உயிர்கள்  எல்லாம்  தொழும்.
தனக்கு உரித்தாதல் - தவம் ஆகிய தன் கருமம் செய்தல்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)